கீரைச் சாறுகளும் பயன்களும்!! (மருத்துவம்)
*முருங்கை கீரையுடன் சிறிது கருப்பு எள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அருந்திட, ரத்த அழுத்தம் சீராகும். ரத்த சோகை குணமாகும்.*பசலைக்கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, பச்சைமிளகாய். உப்பு சேர்த்து வேக வைத்து அருந்த, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும், தைராய்டு நோய் குணமாகும்.*வல்லாரைக்கீரை, பயத்தம்பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அருந்த ஞாபகசக்தி அதிகமாவதுடன் தோல் நோய்கள் குணமாகும்.*
முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம், சுக்குப்பொடி சீரகத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு, பின் வடிகட்டி அருந்த முதுகுத்தண்டுவலி வாதநோய், பக்கவாதம் முதலிய நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.*முள்ளங்கிக் கீரையை அப்படியே வேக வைத்து சூப்பாகவோ, சாறாகவோ அருந்த சிறுநீரகக் கற்கள் கரையும். வாயுவை அகற்றி மலச்சிக்கலை போக்கும்.*சிறுகீரையோடு ஒரு பிடி பார்லி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கி வடிகட்டி வெண்ணெய் சேர்த்து அருந்த உடல் பருமன் குறையும் . பித்த நோய்கள் அகலும்.
*பருப்புப் கீரையுடன் ஊற வைத்த வெந்தயம் போட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிட்டு வடிகட்டி சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்த பித்தம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, எரிச்சல் குணமாகும்.*தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, வேப்பந்தளிர் சிறிது சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் வடிகட்டி அருந்தி வர, வயிற்றுப் பூச்சிகள் அழியும். ரத்தத்தை தூய்மையாக்கி, நெஞ்சகப் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகளைப் போக்கும்.*கரிசலாங்கண்ணியை வேக வைத்து அருந்த, ஆரம்பநிலை புற்றுக் கட்டிகள் சரியாகும். முடியின் வேர்க்கால்களுக்கு பலம் அளித்து, முடி வளர்ச்சிக்கு உதவும்.*கொடிப் பசலைக் கீரையை வேகவிட்டு வடிகட்டி சிறிது கற்கண்டு சேர்த்து அருந்தி வர உடல் சூடு தணியும்.*துத்திக்கீரையுடன் கடுக்காயைத் தட்டி போட்டு, நீர்விட்டு உப்பு போட்டு கொதித்ததும் அருந்த வெள்ளைப்படுதல் குணமாகும்.*மணத்தக்காளி கீரையை சாறாக அருந்த வயிற்றுப்புண்ணை ஆற்றும். உடல் எடை குறைவதோடு, தொப்பையைக் குறைக்கும்.*நச்சக் கொட்டை கீரை, மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போட்டு நீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தி வர கழுத்துவலி குணமாகும். குடற்புண்கள் ஆறும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...