அழகு முகத்துக்கு 10 அழகு குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 41 Second

*சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.*முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.*வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து அதில் குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறையும். *அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர முக அழகும் கூடும்.*மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால், செம்பட்டை முடி கருமையாக மாறும்.*கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் கண் சிவப்பு பறந்துவிடும்.*சிறிதளவு பப்பாளி பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.*வெள்ளை மிளகை பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.*ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.*சோம்பு இலை அல்லது சோம்பை கொதிக்கும் நீரில் போட்டு ஜலதோஷத்திற்கு விக்ஸ் போட்டு ஆவி பிடிப்பது போல் முகத்தை காட்டி ஆவி பிடிக்க வேண்டும். முகத்தை பாத்திரத்துக்கு வெகு அருகில் கொண்டு போக வேண்டாம். சருமம் பளிச்சென மாறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மணப்பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொண்டு மேக்கப் செய்யணும்! (மகளிர் பக்கம்)