மருந்தில்லா மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 45 Second

சுஜோக் அக்கு பிரெஷர்

ஊசி எதையும் பயன்படுத்தாமல் ப்ரோப் எனும் சிறிய உலோகத் தண்டு அல்லது விரல்கள் மூலம் அக்கு புள்ளிகளை தூண்டி சிகிச்சை அளிப்பதுதான் அக்கு பிரெஷர். அக்கு பிரெஷர் என்பதை எளிய கை மருத்துவமாக நாமே செய்யலாம். ஒருமுறை அக்கு நிபுணரிடம் சென்று வந்த பிறகு நம்முடைய பிரச்சனைக்கு உள்ளங்கையில் அல்லது காலில் எந்த புள்ளியை அழுத்த வேண்டும் என்பதைப் கற்றுக்கொண்டால் வீட்டில் இருந்தபடியே நாமும் செய்ய முடியும். ஆனால், கவனம் அவசியம். மருத்துவரிடம் எந்த புள்ளி என நேரடியாகக் கேட்டு அவர் முன்னிலையில் செய்து பழகிய பிறகு அவர் அனுமதித்தால் மட்டுமே நாமாகச் செய்வது நல்லது.

ரெய்க்கி

ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ரெய்க்கி என்பது பல நூறு குறியீடுகளால் இயங்குகிறது. இதை மிக்காவோ உசி என்பவர் இந்த சிகிச்சை முறையை உருவாக்கினார். நம் உடலில் ஏழு நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இதை கீழைத்தேய மரபில் ஏழு சக்கரங்கள் என்பார்கள். பிறப்புறுப்பின் அடிப்பகுதியில் உள்ள மூலாதாரம் முதல் உச்சந்தலையில் சஹஸ்ரா வரை இவை வரிசையாக அமைந்துள்ளன.

இந்த ஏழு சக்கரங்கள் வழியாகவே பிரபஞ்ச சக்தி உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் செயல்பட்டு வருகிறது. ரெய்க்கி சிகிச்சையில் இந்த ஏழு சக்கரங்களுக்கும் தனித் தனி குறியீடுகள் உள்ளன. அதுபோலவே உறுப்புகளுக்கும் தனித் தனி குறியீடுகள் உள்ளன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் அந்த உறுப்பு அமைந்துள்ள இடத்தின் மேற்புறம் அந்தக் குறியீட்டை காற்றில் வரைவார்கள். இதன் மூலம், பிரபஞ்ச சக்தி நம் உடலில் பயணித்து அந்த உறுப்பின் பிரச்சனையை சீராக்குகிறது.

மருந்தில்லா மருத்துவமும் நோய்களும்

மருந்தில்லா மருத்துவங்களான அக்கு ப்ரெஷர், ரெய்க்கி போன்றவற்றில் எல்லாவகையான நோய்களுக்குமே சிகிச்சை தரப்படுகிறது. புற்றுநோயாளிகள், இதய நோயாளிகள், அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பப்பை நோய்கள் உள்ளவர்கள், ஒற்றைத் தலைவலி, சைனஸ், ஆர்த்ரைட்டிஸ் எனும் மூட்டுவலி உட்பட பல்வேறு நோய்களுக்கும் அக்கு பஞ்சரிலும் அக்கு ப்ரெஷரிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஸ்ட்ரெஸ், கை, கால் வலி, அசதி, சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கு ரெய்க்கி நல்லது. மேலும், புற்றுநோய் போன்ற தீவிரமான நோய் உள்ளவர்களும் சுஜோக் அக்கு பஞ்சருடன் ரெய்க்கி சிகிச்சையும் எடுத்துக்கொள்ளும்போது நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உள்ளிருந்து மலர்வோம்… டீடாக்ஸ் ட்ரிக்ஸ்! (மருத்துவம்)
Next post நயன்தாரா முதல் மைக்கேல் ஜாக்சன் வரை! (மகளிர் பக்கம்)