நலம் பல தரும் சுக்கு!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 28 Second

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை” என்பது பழமொழியாக வழங்கி வருவது. அத்தகைய சுக்கு பல நோய்களை கண்டிக்கும் சக்தி வாய்ந்ததாகும்.

*சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து மையாக அரைத்து, சூடாக்கி இளஞ்சூடான பதத்தில் வலியுள்ள கை, கால், மூட்டுகளில் பூசி வந்தால் வலிகள் முற்றிலும் குணமாகும்.

*சுக்கை தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

*சிறிதளவு சுக்குப் பொடியுடன், ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று தின்றால் வாய்வுத் தொல்லை நீங்கும்.

*சுக்கில், சிறிதளவு நீர் சேர்த்து, விழுதாக அரைத்து, நெற்றியில் பற்று போட்டால் தலைவலி போய்விடும்.

*சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து காய்ச்சி குடித்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

*சுக்கோடு சிறிதளவு வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி அகலும்.

*சுக்குடன், மிளகு, வெள்ளை சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து, தொண்டையில் பூசினால் தொண்டைக் கட்டு மாறும். குரலும் இயல்பு நிலைக்கு வரும்.

*சுக்குடன் சிறிதளவு துளசி இலைகளை சேர்த்து மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

*சிறிதளவு சுக்குடன், சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள கிருமிகள் அழியும்.

*சுக்குடன் கொத்தமல்லி சேர்த்து கஷாயம் தயாரித்து பருகினால் மூல நோய் தீரும்.

*சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு கப் தண்ணீர் குடித்தால் தேள், பூரான் கடி போன்றவைகளின் விஷம் முறியும்.

*சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் நீர்க் கோவை நீங்கும். ஈறு, பேன் போன்றவைகளும் ஒழியும்.

*தயிர் சாதத்துடன் சிறிதளவு சுக்குப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும்.

*சுக்குப் பொடியுடன், உப்பு சேர்த்து பல் துவக்கி வந்தால் ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.    

சுக்கினை உணவில் சேர்த்து உண்போம். உடல் நலம் பெறுவோம்.

தொகுப்பு : அ.திவ்யா, காஞ்சிபுரம்.

பசியை தூண்டும் புளிச்சக்கீரை!

*புளிச்சக் கீரை பேருக்கேற்ப புளிப்பு தன்ைம உடையது. ஆந்திராவில் இதற்கு கோங்குரா என்பார்கள்.
*புளிச்சக் கீரை வாத நோயைக் கட்டுப்படுத்தும்.
*சொறி, சிரங்கு, ஆறும்.
*மலச் சிக்கல் தீரும்.
*நாக்கில் சுவையுணர்வு குன்றி இருந்தால் புளிச்சக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் போதும், நன்கு ருசி தெரியும்.
*வாந்தி, வயிற்றுக் குமட்டல் நிற்கும்.
*பசியைத் தூண்டும்.
*ரத்தத்தில் உருவாகும் அழுக்குகளை போக்கி சுத்தமாக்கும்.
*வயிற்றுக் கோளாறுகள் தீரும்.
*புளிச்சக் கீரையோடு மிளகாய் சேர்த்து சட்னி அரைத்தால் சுவையாக இருக்கும்.
*இரும்புச் சத்து நிறைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அப்பாவின் பயிற்சி!அம்மாவின் ஆலோசனை!! (மகளிர் பக்கம்)
Next post நரையை போக்கும் உருளை! (மருத்துவம்)