சந்தனமும் மருந்தாகும்!! (மருத்துவம்)
தென்இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் மரம் சந்தனம். இது தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்புச் சுவையும், நல்ல நறுமணமும் உடையது.
கணுப்பகுதியிலும் நுனிப்பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக்கட்டைதான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது.இதை வீடுகளில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். அது நன்கு வளர்வதற்குப் பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். மரம் நன்கு வளர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின்தான் முழுப்பலன் கிடைக்கும்.
சந்தனம் சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேகநீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும், சிறுநீர் தாரை எரிச்சல் தணிக்கும். குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறுமணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது.
முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புகள், ஊதுவத்திகள், அலங்காரப் பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன்படுத்தப்பட்டாலும், கிருமி நாசினியாக செயல்படும். உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் இழைத்துத் தடவி வர, முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம், வெப்பக்கட்டிகள் குணமாகும்.
சந்தனக்கட்டையை பசும்பாலில் இழைத்துப் புளியங்கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச்சூடு, சிறுநீர்ப்பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும். சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300மி.கி. நீரில் போட்டுக் காய்ச்சி பாதியளவாக காய்ச்சி வடிக்கட்டி 3 வேளை 50 மி.லி. குடிக்க நீர்க் கோர்வை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும்.
சந்தனத் துண்டுகளை நீரில் ஊறவைத்து மைய அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் உட்கொள்ள உடல் தேறி, நோய் தீரும்.
சந்தன எசன்ஸ் 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...