ரோஜாவின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 0 Second

ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம் பருப்பு கலந்து கூட்டு செய்து உண்ண, உடல் உஷ்ணம் சமநிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தரும். ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்து அருந்தினால் பித்தநீர் மிகுதியால் ஏற்படும் மயக்கம், வாய் கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கும். ரோஜா இதழ், இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையலாக சாப்பிட உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் குணமாகி செரிமானத்தை மேம்படுத்தும்.

ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு, சீதபேதி குணமாகும் . வாய்புண், குடல் புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் எளிதில் பிரியும். ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

ரோஜா இதழ்களை தாம்பூலத்துடன் சாப்பிட வாய் துர்நாற்றம் அகலும். ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சி அளிக்கும். சுக்கு மல்லி காப்பியுடன் ரோஜா இதழ்களைச் சேர்த்து அருந்த அஜீரணம் அகலும். தலைசுற்றல், மயக்கம், இதயம் தொடர்பான கோளாறுகள் நீங்கும் . ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். இந்தத் தைலம் காது வலி, காது குத்தல், காதில் புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 25 கிராம் ரோஜா இதழை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு, பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர வாதம் , பித்தநீர் மலத்துடன்
வெளியேறும்.

ரோஜாவை நன்கு காய வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். ரோஜா மலரில் உள்ள துவர்ப்பு சக்தி குழந்தைகளின் சீதபேதிக்கு மருந்தாகிறது. ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களுக்கு விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுவதன் காரணங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அஜீரணம் 5 காரணங்கள்!! (மருத்துவம்)