பாதத்தைப் பாதுகாப்போம்! (மருத்துவம்)
பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் , கால்களில் பாத எரிச்சல் வரும். மேலும், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானாலும், பாத எரிச்சல் ஏற்படும். அதனால் பாத எரிச்சல் என்றவுடன் சர்க்கரைநோய் என எண்ண வேண்டாம். ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுப்பதால், முடக்குவாதம் போன்ற பல காரணங்களாலும் பாதத்தில் எரிச்சல் வரலாம். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல் உண்டாகும்.
சில சமயம் காலில் நெருப்பை வைத்தது போல் இருக்கும். மேலும், கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறி. பின் அந்த பகுதிகளில் உணர்ச்சி குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவை பாத எரிச்சலாக மாறும்.வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கும், பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்னை அதிகம் வருகிறது. ஆர்த்ரரைட்டிஸ் பிரச்னைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதாலும், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கும், கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் உண்டாகலாம்.
அதுபோன்று ‘ஹைப்போ தைராய்டிசம்’ இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.
தீர்வுகள்:மருதாணியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம்செய்து வந்தால் பாதஎரிச்சல் குறையும்.மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும். 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து குழைத்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உறங்கும் முன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். பின் சுத்தமான தேங்காய் எண்ணெயை காலில் தடவினால் எரிச்சல் போகும். நரம்பு சார்ந்த பிரச்னைகளாலும் பாத எரிச்சல் ஏற்படும். எனவே, தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...