30 வயது பெண்ணா…நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 10 Second

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம். இதனால் எதிர்காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம். அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்:

ரத்த அழுத்தம் மற்றும் இருதயம்

பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்றுதான் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது .மேலும் இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம்.

எலும்பு அடர்த்தி

பெண்களின் உடலில் வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கும். எனவே எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

பேப் ஸ்மியர் சோதனை

பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்று நோய்களில் ஒன்றுதான் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய், எனவே 30 வயதிற்கு மேல் எல்லாப் பெண்களும் நிச்சயம் பேப் ஸ்மியர் சோதனை செய்தே ஆக வேண்டும்.

தைராய்டு பரிசோதனை

கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டின் அறிகுறிகளாகும். எனவே, 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.

சர்க்கரை நோய் பரிசோதனை

இன்றைய காலச்சூழலில் 30 வயதை அடைந்துவிட்டால் பெண்கள் நிச்சயம் நீரிழிவு நோய் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. இதன்மூலம் வரும்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுத்துக்கொள்ளலாம்.பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை தடுக்க 30 வயதிலேயே மேமொகிராம் பரிசோதனை செய்துக் கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.

ரத்த சோகை

கர்ப்பக் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே, 20 வயதை அடைந்ததுமே, ரத்த சோகை உள்ளதா என்று ஒரு ரத்த பரிசோதனை செய்து பார்த்து விடுவது மிகவும் பாதுகாப்பானதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அம்முக்குட்டி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post முதியோர்களுக்கான குளிர்கால பராமரிப்பு!! (மருத்துவம்)