தேங்காய் தண்ணீரின் அற்புதங்கள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 25 Second

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், தேங்காய் தண்ணீரில் அடங்கியிருக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பலருக்கும் தெரியாது. அவை என்னவென்று பார்ப்போம்:தேங்காய்த் தண்ணீர் உடலை சுத்தப்படுத்தும் பானங்களில் சிறப்பானது. தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அவை என்னவென்று பார்ப்போம்.

தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும். ஈறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.

தேங்காய் தண்ணீர், சிறுநீர் பாதை தொற்றுகளை குணமாக்கும். சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தும். மேலும், தேங்காய் தண்ணீர், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடும் ஆற்றல் கொண்டது.தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக உள்ளதால், தொடர்ந்து குடித்து வர, செரிமான பிரச்னைகள் நீங்குவதை நன்கு உணரலாம். மேலும், வாயுத் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வர, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் எடை குறையும்.உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் காலையில் ஒரு தேங்காய் தண்ணீர் அருந்தி வர, உடலின் எலெக்ட்ரோலைட்களை சீராக்கி, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும்.

இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும்போது, கடுமையான தலைவலியை உணரும்போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவதும் தடுக்கப்படும்.சிறிதளவு தேங்காய் தண்ணீர் தினமும் அருந்தி வந்தால், உடல் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நீர்ச்சத்து அதிகமாகும். மேலும், நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மகிழ்ச்சியான கர்ப்ப காலத்திற்கு மரபு மருத்துவம்!! (மருத்துவம்)
Next post போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?! (அவ்வப்போது கிளாமர்)