ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:13 Minute, 26 Second

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள். இவள் ஊர் சென்று திரும்பிய இரண்டொரு நாளில் அவள் தேடி வந்து வியக்க வைப்பாள்.இரு வீட்டாரும் அவர்கள் நெருக்கத்தைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. கற்பகத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் துவங்கியது. ஏதோ ஒரு குறை சொல்லி வந்த மாப்பிள்ளைகளையெல்லாம் தவிர்த்தார். இதற்கான காரணம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் தன் தோழியின் சொந்த ஊரில் வேலை வாங்கிக் கொண்டு அவளுடன் இணைந்து வசிக்கத் துவங்கினாள் கற்பகம். இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவர்களைப் பற்றி சுற்றம் பேசும் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் மகிழ்வோடு வாழ்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதெல்லாம் சாதாரணமாக இரு தோழிகளுக்குள் நிகழ்வதுதானே என்கிறீர்களா? ஒரு முக்கிய விஷயம்… கற்பகத்தின் அலைபேசியில் அவளது தோழியின் பெயர் Husband என பதியப்பட்டிருந்தது.நம்மைச் சுற்றிலும் இது லெஸ்பியன் உறவும், வாழ்க்கை முறையும் பரவலாகிவரும் இந்தச் சூழலில் நாம் இது குறித்து பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது குறித்து பாலியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்கண்ணா விவரிக்கிறார்…‘‘ஒரு பெண் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.அவள் அப்படி என்று தெரிந்த பின் அவள் பிறந்த வீட்டிலேயே வாழ்வது கடினம். ஒரு பால் ஈர்ப்பு போன்ற விஷயங்களை எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு நம் சமூகம் இறங்கி வரவில்லை. மறுபுறம் இது ஒன்றும் சமூகக் குற்றமில்லை. ஒருபால் ஈர்ப்பின் சமூக நீதியை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சிலர் போராடியும் வருகின்றனர்.

மாலினி ஜீவரத்தினம் என்பவர் லெஸ்பியன் உறவு குறித்து Ladies and gentle woman என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளனர். தன் பால் ஈர்ப்புள்ள பெண்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்துள்ளனர். விஷயம் வெளியில் தெரிய வரும்போது அவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். தன்பால் ஈர்ப்பும் கிரிமினல் குற்றம் அல்ல என்று 377-வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தன்பால் ஈர்ப்பு உள்ளவர்களும் இயற்கைக்கு மாறானவர்கள் அல்ல. அவர்களின் பாலுணர்வும் மதிக்கப்பட வேண்டியது என்பதற்கான சமூக வெளிச்சங்கள் தோன்றி வரும் இந்தக் காலகட்டத்தில் லெஸ்பியன் உறவில் தாம்பத்யம் குறித்து நாம் விரிவாகப் பேசப் போகிறோம். லெஸ்பியன் உறவு இயல்பானதே என்ற கருத்தை எல்லோரா, கஜூராகோ சிற்பங்களில் பார்க்கலாம். இதில் தன்பால் உறவை வெளிப்படுத்தும் சிற்பங்கள் உள்ளன. ஆண்களுக்கு இடையிலான ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் உறவுக் கலாச்சாரம் இன்றைய சூழலில் அதிகரித்து வருகிறது. இவர்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்வதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. திருமணத்துக்குப் பின் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்க்கவும் இவர்கள் விரும்புகின்றனர்.

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு பால் ஈர்ப்புக்கு ஹார்மோன்கள் தான் காரணம். லெஸ்பியன் ஈர்ப்பு எல்லாக் காலத்திலும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவில் பெண்கள் 10 முதல் 15 சதவீதம் வரை உணர்ச்சி பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனக்கு மிகப் பிடித்த பெண்ணைக் கட்டிக் கொள்வதும், முத்தமிடுவதும் இன்று அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களிடம் ஈடுபாடு கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் 45 சதவீதம் பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனர். 50 சதவீதம் பேர் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் Boise university உளவியல்துறை பேராசிரியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் கூறியுள்ளார்.ஆண்-பெண் உடலுறவில்தானே அதிகபட்ச இன்பம் பெற முடியும். பெண்ணும் பெண்ணும் எப்படி முழுமையான இன்பம் பெற முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பெண்ணும் பெண்ணும் காமுறும்போது அவள் கூடுதல் இன்பத்தை அடைகிறாள். மேலும் தனக்குத் தேவையானவற்றைத் தயக்கம் இன்றிக் கேட்டுப் பெறுகிறாள். ஒருவரைப் பேரின்பம் கொள்ளச் செய்வதில் மற்றவர் ஈடுபாடு காட்டுவதும் லெஸ்பியன் உறவின் பாசிட்டிவ் விஷயங்கள்.

ஆணும் பெண்ணும் உறவு கொள்வதில் ஆண் தனது ஆதிக்க மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறான். பெண்ணை தனது மகிழ்வுக்காகத் தயார்படுத்தி, அதன்பிறகு தான் மட்டுமே பேரின்பம் அடைவதில் ஆண் கவனம் செலுத்துகிறான்.தன்னோடு கூடும் பெண் எங்கே இன்பம் அடைகிறாள், எவையெல்லாம் அவளுக்குப் பிடிக்கும் என ஆண் கேட்பதுமில்லை; அவள் சொல்வதுமில்லை. ஒரு பெண்ணை ஆண்  கையாளும்போது முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். லெஸ்பியன் உறவில் இரு பெண்களும் மென்மையாக நடந்துகொள்கின்றனர். மேலும் இதில் குழந்தைப் பேறு ஏற்படுவதில்லை. இது போன்ற பாசிட்டிவ் காரணங்கள் பெண்கள் லெஸ்பியன் உறவை விரும்பக் காரணம் ஆகிறது.லெஸ்பியன் உறவை சமூகம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பெண்கள் மத்தியில் இது பெரும்பாலும் ரகசியமாக உள்ளது.

திருமணத்துக்குப் பின்னர் ஆண்-பெண் உறவில் முழுமை அடையாதபோது லெஸ்பியன் உறவில் பெண்கள் ஆர்வம் காட்ட வாய்ப்புண்டு. லெஸ்பியன் உறவில் பெண்கள் சுதந்திரமாகவும் கூடுதல் இன்பத்தையும் உணர்கின்றனர். தனக்கு பிடித்ததை எல்லாம் லெஸ்பியன் தோழியிடம் கேட்டுப் பெறுகின்றனர். மேலும் வைபரேட்டர் போன்ற செக்ஸ் உபகரணங்களைப் பயன்படுத்தியும் ஒருவரை ஒருவர் இன்பத்தில் திளைக்கச் செய்கின்றனர்.ஆண் – பெண் உறவில் ஆண் ஆதிக்கம் செலுத்துகிறான். லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையே ஆனாலும் ஆணிடம் இந்த ஆதிக்க மனோநிலை தவறுவதில்லை. மேலும் ஆணுடன் உறவு கொள்ளும்போது கர்ப்பம் தரித்து விடுவோமோ என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது.இவற்றை விரும்பாத பெண்களுக்கு லெஸ்பியன் உறவு சாதகமானதாகி விடுகிறது. சிறு வயதில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தாலே வெறுப்பு வரவும் வாய்ப்புண்டு. அந்த வயதில் ஏற்பட்ட மோசமான நிகழ்வால் ஆணுடனான செக்ஸ் உறவே வெறுத்துப் போகலாம்.

சிறு வயதிலேயே பெண்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பெண் குழந்தைகள் லெஸ்பியன் உறவில் சிக்குகின்றனர். பருவ வயதில் செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம், பெண்கள் மட்டுமே இருக்கும் சூழலும் இவர்களிடையே லெஸ்பியன் உறவுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. பெண்ணுக்கு பெண் மீதே ஈர்ப்பு ஏற்படுவதற்கு ஹார்மோன்கள்தான் காரணம்.ஏதோ ஒரு சூழலில் பெண்கள் இதுபோன்ற உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம். இதனால் ஒரு புறம் பெண்களுக்கு செக்ஸ் இன்பம் கிடைத்தாலும், இது வெளியில் தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் மனதில் இருக்கும். லெஸ்பியன் உறவால் குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் விரிசல் உண்டாகும். இதனால் இவர்களை நம்பி இருக்கும் குழந்தைகளின் வாழ்வும் பாதிக்கப்படும். லெஸ்பியன் உறவுக்கு ஆளான சில பெண்கள்அதிலிருந்து வெளியில் வர விரும்புவார்கள். ஆனால், அவர்களின் பார்ட்னர் விடாமல் தொந்தரவு செய்யவும் வாய்ப்புள்ளது.

லெஸ்பியன் உறவில் இருந்து வெளியில் வர விரும்பும் பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சையால் தீர்வு காணலாம். பதின் பருவத்தில், படிக்கும் காலத்தில் லெஸ்பியன் உறவில் ஈடுபாடு காட்டும் பெண்களின் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. லெஸ்பியன் உறவில் உள்ளவர்களில் யாருக்காவது பால்வினை நோய்த்தொற்று அல்லது எய்ட்ஸ் இருக்கும் பட்சத்தில் இவை பரவவும் வாய்ப்புள்ளது. பெண்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.திருமண பந்தத்துக்குள் போகாத லெஸ்பியன் பெண்களாக இருந்தாலும் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ரமேஷ் கண்ணா. ஆண்-பெண் இணைந்து உருவாக்கும் குடும்ப அமைப்பில் உடமை, அதிகாரம் என சட்டதிட்டங்கள் இறுக்கமான நிலை காணப்படுகிறது.

பாலியல் இன்பத்துக்காக ஓர் ஆணை நம்பும் பெண் முழுமையாக தன்னை ஒப்படைப்பதுடன் அவளது திறமை வளர்ச்சி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்ப அமைப்பில் பெண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு வருகிறது.இன்றைய குடும்ப அமைப்புகள் விரைவில் உடைவதற்கும் இதுவும் ஒரு காரணம். பெண்கள் மனமும் சுதந்திரத்துக்காக பல ஆண்டுகாலமாக ஏங்குகிறது. தலைமுறைப் பெண்களின் ஏக்கம், விடுதலை வேட்கை, ஒரு பால் ஈர்ப்பு என பல விஷயங்கள் லெஸ்பியன் உறவைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் ஆகிறது. இதுவும் பாலுறவில் ஒரு வகைதான். இவர்களை வெறுப்பதும், இவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்வதும் மனிதப்பண்புக்கு எதிரானது. இன்னும் சில ஆண்டுகளில் லெஸ்பியன் இணைகளும் அங்கீகாரத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா? (மருத்துவம்)