பெண்களை மதித்தால் செல்வம் பெருகும்! (மகளிர் பக்கம்)
இப்போது கோவிட் காலம் என்பதால் எல்லாமே ஆன்லைன் காலமாக மாறிவிட்டது. காய்கறி, மளிகை பொருட்கள், அசைவ உணவுகள்… ஏன் உடைகள் என எல்லாமே ஆன்லைனில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இன்னும் சொல்லப்போனால், மாணவர்களுக்கான கல்வி முறையிலும் இதையே பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். இதில் தியானமும் விதிவிலக்கல்ல. சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு வாரம் தொடங்கி சுதந்திர தினம் வரை ஏழு நாட்கள் என ஆன்லைனில் தியான பயிற்சி நடத்தப்பட்டது. இதில் என்ன சிறப்பு என்றால் நடத்தப்பட்ட முதல் நாளிலேயே ஒரு கோடி பேர் அதில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலர் பங்கேற்றனர். இந்த தியான நிகழ்ச்சியை ஆந்திராவை சேர்ந்த ஏகம் என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் இந்த நிறுவனத்தின் இணை உருவாக்குனர் பிரித்தாஜி மற்றும் கிருஷ்ணாஜி இருவரும் பங்கேற்றனர்.
ஆன்லைன் தியானம் என்பதால், இந்தியாவில் மட்டுமின்றி உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள 100 நாடுகளை சேர்ந்தவர்களும் தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்தியாவை சேர்ந்த 2000 கிராமங்களில் உள்ள மக்கள், 2 ஆயிரம் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளும் ஒரு வாரம் மிகவும் சிரத்தையுடன் தியானத்தில் ஈடுபட்டனர். ‘உலக அமைதிக்கான தியானம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.
இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளை கொத்தடிமையில் இருந்து மீட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் பிரித்தாஜி பேசுகையில் `‘பெண்கள் மனித குலத்தின் பாதி, ஒவ்வொரு நாளும் உதவியற்ற நிலையில் பெண்கள் கண்ணீர் சிந்தினால் உலகில் அமைதி எப்படி நிலவும். பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ அங்கு செல்வ வளம் பெருகும்’’ என்றார். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும் பெண்களின் கவுரவத்தை பாதுகாக்கவும் மற்றும் கொரோனா நெருக்கடியில் இருந்து உலகம் விடுபட கூட்டுப் பிரார்த்தனையும் இந்த தியான நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...