கரும்புச் சாறு தரும் அரும் பலன்கள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 0 Second

கரும்பில் உயிர்ச்சத்தான கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதில் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் இருப்பதால் கரும்புச்சாறு பருகிட உடல் வளம் பெறும்.கரும்புச்சாறு அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலைத் தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது. கரும்புச்சாறு என்பது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் சிறந்த ஒன்றாகும்.

கரும்புச்சாற்றைத் தொடர்ந்து குடித்துவர தொண்டையில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் தீரும்.கல்லீரல் நன்கு செயல்பட கரும்புச்சாறு உதவுகிறது.பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் சேதமடைந்து வலி கொடுத்தால், கரும்புச்சாறு அதற்குத் தீர்வு தருகிறது. தொடர்ந்து இதைச் சாப்பிட, பற்கள் வலிமை பெறும்.கரும்புச்சாற்றில் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளைத் தடுக்கக்கூடிய எதிர்ப்புச் சக்திகள் நிறைய உள்ளன. உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. இதனால், இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அதிகரிக்கிறது.

வயிற்றுப் புண்களைச் சரி செய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.கரும்புச்சாற்றுடன் தயிர் சேர்த்துச் சாப்பிட, உடல் எரிச்சல் தீரும். உடல் சூடு குறையும்.சிறுநீரகச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை கரும்புச்சாறு சரி செய்கிறது. கரும்புச்சாற்றில் உள்ள பொட்டாசியம் வயிற்று அமிலங்களைச் சமன் செய்வதோடு, செரிமானத்துக்கும் உதவுகிறது.கரும்புச்சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். இதனால் நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்போம்.கரும்பில் உள்ள பாலிஃபீனால் எனும் இயற்கை வேதிப்பொருள், ரத்தத்தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைவதால் ஏற்படக்கூடிய ரத்த உறைவத் தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பத்து பேர் தேவையில்லை…ஒரு தோழி உண்மையா இருந்தா போதும்! (மகளிர் பக்கம்)
Next post கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)