முக அழகு கூட்டும் புருவங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 30 Second

பெண்களின் முகத்திற்கு அழகூட்டுவதில் புருவத்தின் பங்கு முக்கியமானது. சாதாரணமாக தோற்றம் உள்ளவர்கள் கூட புருவத்தை நன்கு மெருகேற்றி அழகுபடுத்தி நளினமாக காட்சி அளிக்கலாம். புருவங்கள் பல வகைகளாக இருக்கும். அடர்ந்த புருவம், இணைந்த புருவம், அடர்த்தி குறைவான மெல்லிய புருவம், நீண்ட புருவம், குறுகலான புருவம்.

*புருவத்தின் அடர்த்தி குறைவாக இருந்தால் முதலில் பிரவுன் நிறத்தினாலான பென்சிலை பயன்படுத்தி மென்மையான புருவத்தை வரைய வேண்டும். அவ்வாறு செய்வதால் புருவம் அடர்த்தியாக இருப்பதுபோல் தோற்றமளிக்கும்.

*அடர்த்தியான புருவமாக இருந்தால் ‘புரோ பிரஷ்’ஷில் சிறிதளவு ஹேர் ஸ்பிரே கலந்து புருவத்தை சீவி சரி செய்ய வேண்டும்.

*கண்களின் தொடக்கத்திலிருந்து சிறிது தூரத்திலிருந்தே புருவத்தை வரைய வேண்டும். கண்ணின் நடுப்பாகம் கடக்கும்போது சிறிதளவு வளைத்து நீட்டி புருவம் ‘ஷேப்’ செய்தால் அழகாய் காட்சி அளிக்கும். புருவங்களில் இருக்கும் ரோமத்தை நீக்க ‘ஹேர் ரிமூவரை’ பயன்படுத்தக்கூடாது.

*புருவங்களில் அதிக ரோமம் இல்லாதவர்கள் அடிக்கடி புருவத்தில் விளக்கெண்ணெயை தேய்த்து வந்தால் முடி வளரும்.

*புருவத்தில் சில பெண்களுக்கு பொடுகு காணப்படும். அவர்கள் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் குணம் காணலாம்.

*தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை தடவிக்கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும், வசீகரமாகவும் இருக்கும்.

*புருவத்தை ‘புரோ பிரஷ்’ மூலம் சீராக்கும்போது கீழ் இருந்து மேல் நோக்கி சீவுவதே சிறந்தது.புருவங்களை பராமரிப்போம். அழகுடன் காட்சி அளிப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்!! (மருத்துவம்)
Next post பத்து பேர் தேவையில்லை…ஒரு தோழி உண்மையா இருந்தா போதும்! (மகளிர் பக்கம்)