வாஷிங் மெஷின் பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 35 Second

வாசகர் பகுதி

*வாஷிங் மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா எனப் பார்த்து சலவை செய்ய வேண்டும்.

*டாங்கில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்த பிறகுதான் இதனை இயக்க வேண்டும்.

*அதிகமான நுரைத்தரும் சோப்பு, சோப்பு பவுடர்களைப் பயன்படுத்தக் கூடாது.

*துணியை வாஷிங் மெஷினில் போடுவதற்கு முன் கறை அதிகமாக உள்ள இடத்தில் சோப்பை நன்கு தேய்க்க வேண்டும்.

*கடினமான துணிகளை சலவை செய்யும் போது மற்ற துணிகளை குறைத்து விட வேண்டும்.

*சேலைகளை ஒரு அடி அகலத்துக்கு பல மடக்குகளாக மடக்கி சலவை செய்ய வேண்டும்.

*சிறு சிறு துணிகளை கைகுட்டை போன்றவற்றை தலை உறையில் கட்டி போட்டு சலவை செய்ய வேண்டும்.

*துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், வெளியே எடுப்பதற்கு முன்பும் மின்சார சப்ளையை நிறுத்த வேண்டும்.

*வெள்ளைத் துணிகளை கலர் துணிகளோடு சேர்த்து சலவை செய்யக் கூடாது.

*துணி துவைத்து முடிந்ததும் மெஷினை துடைத்து காற்றில் உலரவிட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மார்கழி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போது இணையத்தில்! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)