உங்கள் குழந்தை சைக்கிள் ஓட்டும்போது…!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 55 Second

நம்மைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை. நாம் கொஞ்சம் கவனமாக இருந்தாலே எந்த ஆபத்தையும் தவிர்த்துவிடலாம்.

  • சைக்கிளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. சைக்கிளின் பின்னால் அமர்ந்திருக்கும்போது புத்தகம் படித்துக்கொண்டு செல்லக்கூடாது. ‘என் நண்பன்தானே ஓட்டுகிறான்’ என்று அவனோடு பேசிக்கொண்டே சென்று, அவன் கவனத்தைக் கலைக்கக் கூடாது.
  • சைக்கிளை ஓட்டும்போது சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால் செல்வது, சிவப்போ, மஞ்சளோ ஒளிர்ந்தால் நிறுத்தக் கோட்டுக்கு முன்பே நிற்பது போன்ற விதிகளை எப்போதும் மீறக் கூடாது.
  • சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கும் போது, அவற்றின் இடையே புகுந்து செல்லக் கூடாது. டிரஸ், புத்தகப் பை போன்றவை சக்கரத்தில் மாட்டிக்கொள்ளாது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுவது, பெரிய வாகனங்களை முந்த முயல்வது போன்றவை வேண்டாமே!
  • சாலைகளைக் கடக்கும்போது, நின்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. 18 வயது நிரம்பிய பிறகே சைக்கிளுக்கு அடுத்த கட்ட வாகனங்களை ஓட்டப் பழகவேண்டும்.

அவற்றை ஓட்டும்போதும் மேற்சொன்னவற்றைப் பின்பற்றுவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெளிப்பொருள் சிக்கினால் முதலுதவி!! (மருத்துவம்)
Next post எச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்! (மகளிர் பக்கம்)