குழந்தைக்கு கண்ணில் பூ விழுந்திருக்கா!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 58 Second

என் 7 வயது மகனுக்கு ஒரு கண்ணில் பூ விழுந்தது போல வெள்ளையாக இருக்கிறது. இதை அப்படியே விட்டு விடலாமா? அகற்ற சிகிச்சை  தேவையா?

பதில் சொல்கிறார் குழந்தைகளுக்கான கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா

கண்ணில் பூ விழ பல காரணங்கள் உண்டு. எங்கேயாவது, எப்போதாவது அடிபட்டுக் கொண்டு, அது புண்ணாகி, சிகிச்சையளிக்கத் தவறித்

தழும்பானதன் விளைவாக இருக்கலாம். வைட்டமின் குறைபாடாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு வரக்கூடிய ‘சோம்பேறிக் கண்’ என்கிற ஒரு

பிரச்னையின் விளைவாகவும் இருக்கலாம். அப்படியிருந்தால், வெளிச்சம் உள்ளே போகாது.
கண்களில் பூ விழுந்திருப்பது தெரிந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் சிகிச்சை அவசியம்.

பொதுவாகவே குழந்தைகள் கூரிய ஆயுதங்களையோ, பட்டாசு, ஊதுவத்தி போன்ற நெருப்பு தொடர்பான பொருள்களையோ கண்களுக்கு அருகில்

வைத்து விளையாடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறுதலாக அவை கண்களில் பட்டுக் காயமாக்கலாம்.

ஒருவேளை அப்படி நடந்தால், தாய்ப்பால் விடுவது, விளக்கெண்ணெய் விடுவது மாதிரியான சுய மருத்துவம் எதுவும் செய்யாமல், கண்களை சுத்தமான தண்ணீரால் கழுவி, உள்ளங்கையால் மூடியபடி, உடனே கண் மருத்துவரைப் பார்ப்பதே பாதுகாப்பானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உங்கள் செல்லத்துக்கு வயிறு உப்புசமா!! (மருத்துவம்)
Next post இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்)