குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?!(மருத்துவம்)

Read Time:4 Minute, 12 Second

நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்… அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி உயிர் வாழ்வதே சிரமம். உயிர் வாழ உதவும் என்கிற காரணத்தால்தான் உடலில் நீர்ச்சத்து குறையவே கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு நாளில் சராசரியாக 12 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது அவசியம் என்றும் கணக்கு வைத்திருக்கிறார்கள். இதனை வலியுறுத்தவே Stay hydrated என்கிற ஸ்லோகனும் சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. எல்லாம் சரி… குழந்தைக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது தெரியுமா?!

குழந்தைக்கு அளிக்கப்படும் உணவுக்கிடையில் தண்ணீர் கொடுப்பதுதான் முறை. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை தண்ணீர் கொடுக்கலாம். சராசரியாக 60 மி.லி தண்ணீர் போதுமானது. குழந்தை இன்னும் வேண்டும் என விரும்பினால் 100 மி.லி கூட கொடுக்கலாம். ஆனால், குழந்தை கட்டாயம் ஓரிருமுறை தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை. சில குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை விரும்பலாம். அப்படியானால் கொடுக்கலாம். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்க விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

அனேக குழந்தைகள் பிறந்த ஒன்றிரண்டு வாரங்களிலிருந்து ஒரு வயது வரை கூட தண்ணீரை தனியே விரும்பி குடிப்பது இல்லை. தண்ணீருக்கு பதிலாக பால், மோர் போன்ற திரவ உணவையே அவர்கள் விரும்புவார்கள். ஆகவே தண்ணீர் குடிப்பதென்பதை குழந்தையின் விருப்பத்திற்கே விட்டுவிடுங்கள். தண்ணீர் குடிக்கவில்லையென்றால் அதனால் எவ்வித கெடுதலும் ஏற்பட்டுவிடாது. ஏனென்றால் குழந்தைக்கு நாம் அளிக்கும் பால், பழச்சாறு, கடைந்த மோர் மற்றும் இதர உணவுகள் மூலமாகவே அன்றாடம் தேவைப்படும் தண்ணீரும் கிடைத்துவிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் மட்டும் உண்மையாகவே குழந்தைகளுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. உதாரணமாக, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

மிகவும் வெப்பமான காலங்களில் வெப்பமும், உஷ்ண காற்றும், வியர்வையும் மிகுதியாக ஏற்படும் நேரங்களில் குழந்தைகளுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும் அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும். இம்மாதிரியான வேளைகளிலெல்லாம் சிறுநீர் அளவில் குறைந்தும், கருமஞ்சள் நிறத்திலும் வெளிவரும். குழந்தை அதிக தாகத்தோடு இருக்கும். தண்ணீரை விரும்பாத குழந்தையும்கூட அதிக தண்ணீரை விரும்பி குடிக்க முற்படும். இந்த நிலை ஏற்பட்டால் 200 மி.லி தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், அரை கரண்டி சர்க்கரையும் சேர்த்து குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!(அவ்வப்போது கிளாமர்)
Next post நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?!(மருத்துவம்)