சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!(மருத்துவம்)
பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
- கரும்பின் சாறில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண் குணமாகும்.
- கல்லீரல் நன்றாக செயல்படவும், செரிமானம் நன்றாக நடைபெறவும் கரும்பு பெரிதும் உதவுகிறது.
- கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக் கொன்று இணைந்து ஏற்படக் கூடிய ரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
- கரும்பை உண்டால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்துள்ளதால், வேலை ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும்.
- கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு மற்றும் பற்களை வலிமையாக்கும்.
- பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
- ஆன்டி ஆக்ஸிடண்டீஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ், புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான ேதாற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
- கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.
- கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க உதவும்.
- கரும்பை கடித்து சாப்பிடும் பொழுது பற்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
- கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் பண்பு கொண்டது.
- உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி சமநிலைப்படுத்துகிறது.
- உடல் சூட்டைக் குறைத்து உடலின் தட்பவெப்ப நிலையை சீராக்குகிறது.
- உடலில் உள்ள நச்சுக்களையும், மாசுகளையும் நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
- கரும்பு சாற்றில் தேன் கலந்து குடித்தால் ரத்த சோகை நோய் குறையும்.
- தேங்காய்ப்பாலுடன் கரும்புச் சாறு சேர்த்துப் பருக சீதபேதி குறையும்.
- கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...