ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது: “பருவத்தில் படுத்தும் பரு”!!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 19 Second

கன்னத்தில் பரு வந்து மறைந்த இடத்தில் குழி ஏன் வருகிறது? யார் யாருக்கெல்லாம் வரும்? வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு சரி செய்வது. பார்லர்களில் செய்யப்படும்முறைகள் என்ன என்பவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம். பருவ வயதை எட்டிப் பிடிக்கும் இருபாலரையும் அலறச் செய்யும் மிகப் பெரும் பிரச்சனை பரு. முகத்தில் பரு வந்துவிட்டால் அவ்வளவுதான். யார் எதைச் சொன்னாலும் அதைச் செய்து பார்த்துவிடும் முயற்சியில் இளைஞர்கள் இருக்க.. பற்றாக்குறைக்கு தொலைக்காட்சி விளம்பரங்களும் பலவிதமான காஸ்மெட்டிக் அயிட்டங்களை தலையில் கட்டும் யுக்தியில் கைகோர்ப்பார்கள். பரு வந்த இடத்தையே எந்த நேரமும் விரல்களால் தொட்டுப் பார்ப்பது, பருவின் மீது விரல் வைத்து அழுத்துவது, தோல் மருத்துவர்களின் ஆலோசனையின்றி, முகபூச்சு க்ரீம்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவது.

ஒவ்வாமையால் ஏற்படும் அலர்ஜி. இவற்றால் தழும்பு, குழி, பள்ளம், மேடு, போன்றவை முகத்தில் நிரந்தர தடத்தை ஏற்படுத்திவிடும்.பரு வந்து நீங்கிய இடத்தில் சிலருக்கு குழியின் அளவு சிறியதாகவும், சிலருக்கு பெரியதாகவும் இருக்கும். நமது சருமத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறிய துளைகள் வழியாகவே உள்ளுறுப்புகள் சுவாசிக்கின்றன. சருமத்தில் உள்ள சிறு துளைகள் வழியாகத்தான் நமது வியர்வை, உடலில் உள்ள எண்ணெய்த் தன்மை எல்லாம் வெளியேற்றப்படுகிறது. இவற்றை வெளியேற்றும் முறையில் சிக்கல் ஏற்படும்போது, சருமத்தில் குழிகள் தோன்றி, மேடு பள்ளங்களோடு முகத்தோற்றத்தை விகாரப்படுத்தும்.

சருமத்தில் குழிகள் தோன்றக் காரணங்கள்:

1. சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக சுரப்பவர்களுக்கு, சருமத்தில் உள்ள சிறு துளைகள் வழியாக வெளியேற முடியாத நிலையில் துளைகள் தானாகவே பெரிதாகத் தொடங்கும்.

2. அதிகம் வியர்க்கும் தன்மைகொண்ட சருமத்தைப் பெற்றவர்களின் தோலில் டெட் செல்ஸ் அதிகமாக இருக்கும். தொடர்ந்து வியர்வை வெளியேறும்போது அடைக்கப்பட்ட துளைகள் தானாகவே பெரிதாகும்.

3. சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்கள் தோலில் உள்ள கொலாஜினையும், எலாஸ்டிசிட்டித் தன்மையையும் குறைக்க வல்லது. சூரிய ஒளி தோலில் தொடர்ந்து நேரடியாகப் படும்போது தோல் அடர்த்தியாகி துளைகள் பெரிதாகத் தெரியத் துவங்கும்.

4. மாதவிடாய் மற்றும் தாய்மைப்பேறு காலங்களில் மகளிருக்கு பருக்களால் உருவான சிறு துளைகள் வயது முதிர்வில் பெரிதாய் தோன்ற ஆரம்பிக்கும். காரணம், தோலில் உள்ள கொலாஜின் அளவு குறைபாடு மற்றும் எலாஸ்டிசிட்டி தன்மை குறைவே காரணம்.

5. ஆண்களின் சருமத்தில் ரோமங்கள் அடர்த்தியாகவும், பெண்களின் சருமத்தில் இருப்பதைவிட இவர்களின் சருமத்தில் துளைகள் சற்று பெரியதாகவும் இருக்கும். விளைவு, ஆண்களுக்கு பரு தோன்றினால் உருவாகும் பள்ளங்கள் கூடுதலாய் பெரியதாகத் தோன்றும்.

6. அழுக்கு, தூசி போன்றவை முகத்தில் படியும்போது சரும துளைகள் அடைபட்டு, தோல் சுவாசிக்கும் தன்மையை இழக்கும். விளைவு, உடல் கழிவுகள் வெளியேற முடியாத நிலையில் சருமம் பாதிப்படையும்.

7. அதிகமாக மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலமாகவும் தோலின் சுவாசம் தடைபடும்.

8. பரம்பரை காரணங்களும் முகத்தில் குழிகள், பள்ளங்கள் தோன்றக் காரணமாக இருக்கிறது. நமது வீடுகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களான கடலை மாவு, முல்தானி மட்டி, பயத்த மாவு இவற்றில் எதையாவது ஒன்றை பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போடுவதன் மூலம் முகத்தில் இருக்கும் பள்ளம், குழிகளின் அளவை சற்று கட்டுப்படுத்தலாம். ஆனால் முழுவதும் மறைக்க முடியாது.

வீட்டில் உள்ள பொருட்களில் தீர்வு…

* ஒரு கப் அரிசி மாவுடன் ஒரிஜினல் மஞ்சள் பொடி சிறிது, தேன் ஒரு ஸ்பூன், லெமன் அரை ஸ்பூன் கலந்து பேஸ்டாக்கி இரவில் 10 முதல் பதினைந்து நிமிடங்களுக்கு பேக் போட்டு, பிறகு முகத்தைக் கழுவுதல் வேண்டும். அரிசி மாவு இயல்பாக தோல்களை டைட் செய்யும் தன்மை கொண்டது. இதனால் முகத்தில் உள்ள துளைகள் சின்னதாகத் தொடங்கும்.

* அரிசி களைந்த தண்ணீரைச் சேகரித்து, அதில் முகத்தை சுத்தம் செய்தாலும், சருமம் டைட்டாகவும் சாஃப்டாகவும் மாறத் துவங்கும்.

* தயிரை முகத்திற்கு அப்ளை செய்வது மிகவும் நல்லது. சருமத்திற்குத் தேவையான எலாஸ்டிசிட்டிதன்மை தயிரில் அதிகமாக உள்ளது. தயிர் குளிர்ச்சி தருவதுடன், முகத்தில் உள்ள துளைகளை டைட் செய்யும் தன்மையும் தரும்.

* வாழைப்பழத்தில் வழவழப்புத் தன்மை இருப்பது அனைவரும் அறிந்ததே. நமது சருமத்திற்குத் தேவையான கொலாஜின் லெவலும் வாழைப்பழத்தில் அதிகம். எனவே, வாழைப்பழத்தை பேஸ்டாக்கி, அத்துடன் கொஞ்சம் பசும்பால் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடலாம் அல்லது மசாஜ் கொடுக்கலாம். இதில் சருமத்தின் எலாஸ்டிசிட்டி தன்மை கூடுவதோடு, சருமத்திற்கு சாஃப்ட்னெஸ் கிடைக்கும்.

* வெள்ளரிக்காய், கேரட், மாதுளை போன்றவைகளை நன்றாக மிக்ஸியில் அடித்து ஜூஸ் எடுத்து ஸ்ஃப்ரே பாட்டில்களில் தனித்தனியே ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகத்தில் ஸ்ஃப்ரே செய்து, சருமம் அப்ஸர் செய்தபின், முகத்தை சுத்தம் செய்தால் சருமத்தில் உள்ள துளைகளின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

அடுத்த வாரம்

குழிகளை மறைக்க பார்லர்களில் செய்யப்படும் O3+ ஃபேஷியல் செய்முறை விளக்கம் படங்களுடன்

(ஒப்பனைகள்  தொடரும்…)

* வெளியில் செல்லும்போது முகத்தை மறைத்துக் கொண்டு செல்வதே மிகவும் நல்லது.

* நிறைய தண்ணீர் குடித்தல் வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பும் முகத்தை சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு படுக்க வேண்டும்.

* முகப்பரு உள்ளவர்கள் அதிகமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துதல் கூடாது.

* ஃபேஷியல் செய்வதாக இருந்தால், தோலுக்கு எலாஸ்டிசிட்டி தன்மையினைத் தரும் ஃபேஷியலாகச் செய்தல் வேண்டும்.

* இரவில் தூங்கச் செல்லும் முன் நல்ல மாய்ச்சரைஸர் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்துவிட்டு படுப்பதும் நல்லது.

* சருமத்தில் உள்ள குழிகளை மறைப்பதற்கென ப்ரைமர் தனியாக உள்ளது. குறிப்பிட்ட ப்ரைமரை முகத்தில் போட்ட பிறகு, மேக்கப் போடுவதன் மூலம், மேக்கப் சருமத்தை பாதிக்காமல் பாதுகாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சருமத்தில் முகம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?(அவ்வப்போது கிளாமர்)