அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்!!(மருத்துவம்)

Read Time:1 Minute, 30 Second

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற அரசு மருத்துவமனை உட்பட 6 மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைக்காத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20 சதவிகித குடும்பங்களில் குழந்தை இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்கள் இல்லை.

இதனால் தனியார் கருத்தரித்தல் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இந்த மையங்களுக்கு சென்றால் அதிகம் செலவாகிறது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கர்ப்பக்கால சர்க்கரை நோய்! கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!!(மருத்துவம்)
Next post மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?(அவ்வப்போது கிளாமர்)