கோடைக்கு இதமான ஜூஸ்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 30 Second

வெயில் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. சூரியனின் தாக்குதலில் இருந்த தப்பிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் முதல் உணவு ஆலோசகர்கள் வரை பரிந்துரைப்பார்கள். வெறும் தண்ணீருக்கு பதில் விதவிதமான பழச்சாறுகள் செய்து பருகலாம். இதனால் கோடையின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது மட்டுமில்லாமல் உடலுக்கும் நல்லது. தோழியருக்காக ஆரோக்கியமான குளிர்பானங்களை வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் வசந்தா.

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜூஸ்

தேவையானவை :

ஆரஞ்சு – 2,
திராட்சை – 1 கப்,
குளிர்ந்த நீர் – 1 கப்,
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்,
தேன் – 2 டேபிள் ஸ்பூன்,
துருவிய இஞ்சி – சிறிது,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஆரஞ்சை தோல் உரித்து, விதைகளை நீக்கி, திராட்சையையும் சுத்தம் செய்து, ஆரஞ்சு, திராட்சை, இஞ்சி துருவல், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து மிக்சி ஜூஸ் ஜாரில் அடித்து வடிகட்டி, தேன் சேர்த்து நன்றாக கலக்கி, ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம். ஜிலு ஜிலு வென இருக்கும்.

மேங்கோ லஸ்ஸி

தேவையானவை :

கெட்டித் தயிர் – 2 கப்,
தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகள் – ½ கப்,
மேங்கோ எசன்ஸ் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

தயிரை துணியில் கட்டி தொங்க விட்டு தண்ணீரை வடிகட்டவும். வடிகட்டிய தயிரை தோல் நீக்கிய மாம்பழத்துண்டுகள் சேர்த்து மிக்சியில் அடிக்கவும். பிறகு அதில் கொஞ்சம் மாம்பழ துண்டகளை சின்ன சின்னதாக வெட்டி அதில் சேர்த்து பரிமாறலாம்.

ஸ்வீட் லஸ்ஸி

தேவையானவை :

கெட்டித் தயிர் – 2 கப்,
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – சிட்டிகை,
ஏலத்தூள் – சிறிது.

செய்முறை:

தயிரை மெல்லிய துணியில் கட்டி வடிகட்டவும். தண்ணீர் வடித்ததும், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, உப்பு, நீர் சேர்த்து மிக்சியில் அடித்து ஏலத்தூள் சேர்த்து கூலாக குடிக்கலாம். கூல் கூலாக இருக்கும்.

ஃப்ரூட் காக்டெயில்

தேவையானவை :

திராட்சை ஜூஸ் – 1 கப்,
ஐஸ்கட்டி – 1 கப்,
புதினா சாறு – 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி நாறு – 1 ஸ்பூன்.

செய்முறை:

திராட்சை ஜூஸில் புதினாச்சாறு, இஞ்சிச் சாறு, சிறிது சர்க்கரை சேர்த்து ஒன்றாக கலந்து ஐஸ்கட்டிகள் மேலே போட்டு பரிமாறவும்.

துளசி  சோற்றுக் கற்றாழை ஜூஸ்


தேவையானவை :

சோற்றுக் கற்றாழை ஜெல் – ½ கப்,
துளசி – ½ கப்,
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்,
பனை வெல்லம் – ½ கப்.

செய்முறை :

கற்றாழை ஜெல்லை 7 முறை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, துளசி, தயிர், எலுமிச்சைசாறு, பனைவெல்லம், 1 டம்ளர் நீர் சேர்த்து அரைத்து வடிக்கட்டவும். ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென சாப்பிட தாகம் தணியும். உடல் சூடு குறையும்.

ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

தேவையானவை :

நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் – 1 கப்,
ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – ½ கப்,
ஐஸ்கட்டிகள் – ½ கப்.

செய்முறை:

ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ஐஸ்கட்டிகள் ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் விப்பரில் போட்டு அடித்து ஜில்லென்று பரிமாறவும்.
மாம்பழ ஸ்ட்ராபெர்ரி மாக்டெயில்

தேவையானவை :

மாம்பழக் கூழ், நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள்,
இளநீர்,
ஐஸ்கட்டிகள் – தலா 1 கப்.

செய்முறை :

மாம்பழக்கூழ், ஸ்ட்ராபெர்ரி, இளநீர் மற்றும் ஐஸ்கட்டிகள் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியின் விப்பரில் போட்டு அடித்து பரிமாறவும்.
புதினா, சீரக ஜூஸ்

தேவையானவை:

புதினா இலை – 1 கப்,
சீரகப்பொடி – 2 ஸ்பூன்,
சர்க்கரை – 3 ஸ்பூன்,
சின்ன மாங்காய் துண்டுகள் – 5,
தண்ணீர் – 2 டம்ளர்,
உப்பு – சிட்டிகை.

செய்முறை:
புதினா இலைகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீரில் சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். மாங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதன் சாரையும் கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து சூடாகவும் குடிக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் குடிக்கலாம். கோடையில் வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இது காக்கும்.
செம்பருத்திப் பூ சர்பத்

தேவையானவை :

செம்பருத்திப் பூ – 20,
எலுமிச்சை சாறு – ½ கப்,
இஞ்சி சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
நெல்லிக்காய் சாறு – 1 ஸ்பூன்.
சர்க்கரை – ¼ கிலோ.

செய்முறை:

செம்பருத்திப் பூ இதழ்களை சுத்தப்படுத்தி எலுமிச்சை சாறில் ஊறவைத்து, மறு நாள் இதனை மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். இதனுடன் நெல்லிக்காய் சாறு, இஞ்சிச் சாறு கலந்து வைக்கவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு சர்க்கரை போட்டு பாகுபதம் வந்தவுடன் சாறு கலவையை சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். ஆறியதும் காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலியில் வைத்து தேவையின்போது சிறிது தண்ணீர் கலந்து குடிக்க சூடு தணியும்.

நுங்கு கீர்

தேவையானவை :

பால் – 2 கப்,
இளசான நுங்கு – 10,
சர்க்கரை – 1 கப்,
ஏலத்தூள் – சிறிது.
செய்முறை:

நுங்கை தோல் நீக்கி ெபாடியாக நறுக்கி மிக்ஸியில் நன்கு அரைத்து, ஆறவைத்த பாலில் ஏலத் தூள், அரைத்த நுங்கு சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம். இதில் சர்க்கரைக்கு பதில் சிறிது உப்பு, சீரகம் சேர்த்துக் குடிக்கலாம்.
கேரட் கூல் கீர்

தேவையானவை :

கேரட் – 5,
பால் – 2 கப்,
சர்க்கரை – ¼ கப்,
கன்டென்ஸ்டு மில்க் – 2 ஸ்பூன்,
ஏலப்பொடி – சிறிது,
நட்ஸ் துருவியது – 2 ஸ்பூன்
செய்முறை:

கேரட்டை தோல் சீவி ஆவியில் வேகவிட்டு எடுத்து ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி அதில் ஏலப்பொடி, சர்க்கரை சேர்த்து கரைத்ததும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி ஆறவிடவும். அதனுடன் அரைத்த கேரட் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக அடித்து எடுத்து ஃபிரிட்ஜில் குளிர்ந்ததும் வறுத்த நட்ஸ் தூவிப் பரிமாறலாம்.
கொய்யா வாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை :

கொய்யாப் பழம் – 1,
வாழைப்பழம் – 2,
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – 2,
சர்க்கரை – ½ கப்,
தேன் – சிறிது,
ஐஸ்கட்டிகள் சிறிது.

செய்முறை:

கொய்யாப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். எல்லா பழங்களையும் மிக்ஸியில் போட்டு, அரைத்து, சிறிது நீர் விட்டு, சர்க்கரை, தேன் விட்டு மீண்டும் அரைக்கவும். பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி, ஃபரிட்ஜில் வைத்து ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறவும். நீருக்கு பதிலாக பால் சேர்த்தும் குடிக்கலாம். (பப்பாளி பழம், பலாச் சுளை என சீசனுக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தலாம்)

மிக்ஸட் ஃப்ரூட் மாக்டெய்ல்

தேவையானவை :

தர்பூசணிப்பழம் – 1/4 துண்டு,
பச்சை திராட்சை – 1/4 கப்,
எலுமிச்சம் பழம் – ½ மூடி,
இஞ்சிச் சாறு – 2 ஸ்பூன்,
புதினா இலைகள் – சிறிது,
உப்பு – சிட்டிகை,
சர்க்கரை,
ஐஸ்கட்டிகள் – சிறிது,
சாக்கோ சிப்ஸ் – 1 ஸ்பூன்.

செய்முறை:

தர்பூசணி பழம், திராட்சையை தனித் தனியே மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து வடிகட்டவும். எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சிச் சாறு, ஐஸ்கட்டிகள், புதினா இலை, சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.  அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் தூவி குடிக்கலாம். சாத்துக்குடி சாறும் சேர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பலாப்பழ சமையல்!!(மகளிர் பக்கம்)