வெள்ளை முட்டை vs ப்ரவுன் முட்டை!(மருத்துவம்)
சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் வெள்ளை முட்டைகள் ஒரு ட்ரேவிலும் ப்ரவுன் முட்டைகள் ஒரு ட்ரேவிலும் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிலர் அதை நாட்டுக் கோழி முட்டை என நினைத்துக்கொள்கிறார்கள். பலருக்கும் அது கோழிமுட்டைதானா என்பதே சந்தேகம். வெள்ளை முட்டைகளையே அதிகம் பார்த்து பழகிய நமக்கு ப்ரவுன் முட்டைகள் குழப்பதைத் தருகின்றன. சிலர் பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம்.
எனவே அதில்தான் சத்துக்கள் அதிகம் என்பார்கள்.
வெள்ளை முட்டை, ப்ரவுன் முட்டை இரண்டில் எது பெஸ்ட்?
உண்மையில் வெள்ளை நிறம், பிரவுன் நிறம் என்பன எல்லாம் கோழிகளைப் பொருத்த விசயம் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக, வெள்ளை லெகான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிறக் கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழியின வகைகள் பிரவுன் முட்டைகளையும் இடுகின்றன. (நாட்டுக்கோழிகள் சற்றே பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை, அதனால்தான் கலப்படக்காரர்கள் அளவில் சற்று பெரிய பிராய்லர் கோழி முட்டைகளை, டீத்தூள் டிகாக்ஷனில் முக்கி, நாட்டுக்கோழி முட்டைகள் என விற்கின்றனர்) மற்றபடி, பிரவுன் முட்டைகளோ வெள்ளை முட்டைகளோ இதன் ஊட்டச்சத்து மதிப்பில் எந்த வித்யாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால், பிரவுன் முட்டைகள் ஏன் விலை அதிகமாக உள்ளன?
பிரவுன் முட்டைகள் வெள்ளை முட்டைகளைவிடவும் அளவில் சற்று பெரியவை. எனவே, அதன் விலையும் அதிகமாக உள்ளது அவ்வளவே.
முட்டை ஓடுகளில் வித்யாசங்கள் உள்ளனவா?
நிறத்தைத் தவிர வெள்ளை முட்டையின் ஓட்டுக்கும், பிரவுன் முட்டையின் ஓட்டுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சிலர், பிரவுன் முட்டையின் ஓடுகள் தடிமனானவை என்பார்கள். இதுவும் தவறு. அளவில் சற்றுப் பெரியவையே தவிர, தடிமனில் வித்தியாசம் கிடையாது.
மஞ்சள் கருவில் வேறுபாடு இருக்குமா?
இருக்காது. சிலர் பிரவுன் முட்டைகளின் மஞ்சள்கரு, வெள்ளை முட்டைகளைவிடவும் மஞ்சளாக இருக்கும் என்பார்கள். இது தவறு. பொதுவாக, கோழி சாப்பிடும் உணவுக்கும் அதன் மஞ்சள் கருவுக்கும் மட்டுமே தொடர்பு உண்டு. அதாவது, மக்காச்சோளம், சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா, போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து அளிக்கும் பொழுது கருவின் மஞ்சள்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.மற்றபடி, கோழி முட்டையின் ஓட்டின் நிறத்துக்கும் மஞ்சள்கருவின் நிறத்துக்கும் தொடர்பு இல்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...