விதைப்பை புற்றுநோய் அலர்ட்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:12 Minute, 32 Second

ஆண்கள் மட்டும்

புற்றுநோய்… மனித இனத்தின் சாபக்கேடு. காரணம் எதுவும் இல்லாமல், உள்ளிருந்துகொண்டே உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து. இதில் ஆண்களைப் பாதிக்கும் எலும்பு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், வாய் வழி புற்றுநோய் என்கிற பட்டியலில் தற்போது விதைப்பை புற்றுநோய் இடம்பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த ஆபத்தில் இருந்து ஆண் இனத்தைப் பாதுகாப்பது எப்படி?

பதில் அளிக்கிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த ராஜா.‘‘பல வருடங்களுக்கு முன்பு விதைப்பை புற்றுநோய் (Prostate cancer) வயதானவர்களுக்குத்தான் வருவதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. 40 வயதிலேயே இப்போது ஆண்களுக்கு இந்நோய் வந்துவிடுவதை பார்க்க முடிகிறது. நடுத்தர வயதினர் முதல் முதுமைப் பருவத்தினர் வரை இப்பாதிப்பு வரலாம். இளம்வயதில், அதாவது 35 வயது வரை இந்நோய் வர வாய்ப்புகள் குறைவு. வயதாகவயதாக, இப்பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளது.’’

எதனால் வருகிறது?

‘‘நமது உடலில் உள்ள மரபணுக்கும் விதைப்பை புற்றுநோய்க்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தகாத உறவுக்கும், விதைப்பை புற்றுநோய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்நோய் எந்த வயதிலும், யாருக்கும், எந்த காரணத்துக்காகவும், எப்படி வேண்டுமானாலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு டெஸ்டோஸ்டீரோன்(Testosterone) என்ற ஆண் ஹார்மோன் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஹார்மோன் விதையில் உருவாகி, ரத்தத்தில் கலக்கிறது.’’

எப்படி கண்டுபிடிப்பது?

‘‘விதைப்பை புற்றுநோயை எளிதாக கண்டுபிடிக்கலாம். இதற்கான அறிகுறிகளை Obstructive Symptoms, Irritating Symptoms என இரண்டு வகையாக பிரிப்பார்கள். முதல் வகை அறிகுறி சரியாக சிறுநீர் போகாத காரணத்தால் ஏற்படுவதாகும். இந்த அறிகுறி உள்ளவர்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுந்திருப்பார்கள். இரண்டாவது வகை அறிகுறியாக எரிச்சல், நமைச்சல் போன்றவற்றை கருதலாம்.

நமது உடலில் சிறுநீர்ப்பைக்கும், அது வெளியேறுகிற குழாய்க்கும் நடுவில் விதைப்பை அமைந்துள்ளது. எனவே, இந்த சிறுநீர் ப்ராஸ்ட்டேட் சுரப்பி வழியாக சென்ற பின்னர்தான் வெளியேறும். விதைப்பை புற்றுநோய் அதிகமாக அதிகமாக சிறுநீர் குழாய் அழுத்தப்படும்.

இதன் காரணமாக சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதனால், அடிக்கடி சிறுநீர் போக வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பாக, சிறுநீர் கழிப்பதற்காக எழுவார்கள். மேலும், அதை கட்டுப்படுத்த முடியாமலும் அவதிப்படுவார்கள். இதனால், சிறுநீர் வெளியேறும் பாதையில் தொற்று, எரிச்சல் உண்டாகும்.’’

மக்களிடம் எந்த அளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது?

‘‘விதைப்பை சுரப்பி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வருபவர்களை இரண்டு வகையாக பிரிப்போம். முதல் வகையை சேர்ந்தவர்கள் சிறுநீர் பாதையில் ஏதாவது தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக மருத்துவமனைக்கு வருவார்கள்.

இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் விதைப் புற்றுநோய் பரிசோதனைக்காக வருவார்கள்.’’ ப்ராஸ்டேட் சுரப்பி பற்றி…‘‘ப்ராஸ்டேட் சுரப்பி தனித்தன்மை வாய்ந்த சுரப்பி ஆகும். ஆகவே, நமது உடலில் மற்ற புலன்களின் வேலைப்பாடு குறையும்போது இந்த சுரப்பி மட்டும் பெரிதாகிக் கொண்டே போகும்.

விதைப்பை சுரப்பியில் இருந்து ஒருவிதமான PSA(Prostate-Specific Antigen) ரசாயனம் சுரக்கும். வழக்கமாக எல்லோருக்கும் ரத்தத்தில் இந்த வேதிப்பொருள் இருக்கும். சராசரியாக இதனுடைய அளவு நான்குக்கும் குறைவாகவே காணப்படும்.

இந்த புற்றுநோய் ஒருவர் உடலில் பரவ பரவ, PSA-வின் அளவு கூடும். எனவே, PSA லெவல் அதிகரிக்க அதிகரிக்க, விதைப்பை புற்றுநோய் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வயதாக வயதாக, கண்பார்வை மங்கலாகும். செரிமான சக்தி குறையும். எலும்பு பலவீனம் அடையத் தொடங்கும்.

விதைப்பை சுரப்பியில் ஏற்படும் கட்டிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது வகை, Benigan Prostatic Hyperlasia(BPH) இரண்டாவது வகையைத்தான் புற்றுநோய் என குறிப்பிடுகிறோம். BPH-ஐ சிறு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம். சிறுநீர் கழிப்பதில் பாதிப்பு இருந்து, ப்ராஸ்டேட் சுரப்பியில் பிரச்னை எதுவும் இல்லையென்றால், அது புற்றுநோய் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.’’
யார் யாருக்கு இந்த ரிஸ்க் அதிகம்?

‘‘50 வயதைக் கடந்தவர்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ண வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, PSA லெவல்-ஐ பரிசோதிப்பது அவசியம். இது அதிகமாக இருந்தால், புற்றுநோய் இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு Benigan Prostatic Hyperlasia(BPH)-வாக இருக்கக் கூடும்.

வேறு சிலருக்கு புற்றுநோய் இருக்கலாம். இதற்கு பல நிலையின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பது வேறுபடும். PSA லெவல் 4-க்கும் குறைவாக இருப்பது வழக்கமானது. 4-லிருந்து 10 வரை இருக்கும்பட்சத்தில் BPH அல்லது புற்றுநோயாக இருக்கலாம். PSA லெவல் 10-க்கும் அதிகமாக இருக்குமானால், BPH-ஆக இருக்க சாத்தியம் கிடையாது. அதேவேளையில், புற்றுநோயாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.’’

என்னென்ன பரிசோதனைகளில் கண்டுபிடிப்பார்கள்?

‘‘அனைத்து விதைப்பை புற்றுநோயாளிகளுக்கும் DRE என்று குறிப்பிடப்படுகிற Digital Rectal Examination எனும் பரிசோதனை செய்யப்படும். இந்த சிகிச்சை முறையில், மருத்துவர் நோயாளியின் விதைப்பை சுரப்பியை பரிசோதனை செய்வார். பின்னர், Biopsy எனப்படும் சதை பரிசோதனை செய்யப்படும்.விதைப்பை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதன் வீரியத்தை இந்த பயாப்ஸி பரிசோதனை முலம் கண்டறியலாம்.

MRI ஸ்கேன் மூலம் விதைப்பை சுரப்பியில் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளதா, அதைத் தாண்டி வெளியே வந்து இருக்கிறதா, இடுப்பு எலும்புக்குக் கீழே உள்ளதா? நெறிகட்டிகளில் பரவி இருக்கிறதா? அல்லது உடலில் வேறு எங்கேனும் பரவி உள்ளதா என கண்டு அறியலாம். விதைப்பை புற்றுநோய் எலும்புக்கும் பரவலாம். எனவே, எலும்பை ஸ்கேன் செய்தும் பார்த்துக் கொள்ளா வேண்டும். வயிற்றுப்பகுதியில் பரவி உள்ளதா எனக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட வேண்டும்.

தற்போது, விதைப் பை புற்றுநோயைக் கண்டுபிடிக்க, PSMA – PET Scan பயன்படுத்தப்படுகிறது. நோயாளிக்கு தேவைப்படும் நிலையில் இந்த ஸ்கேன் எடுக்கலாம்.’’

சிகிச்சைகள்….

‘‘விதைப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும், PSA Test Level அதிகமாக காணப்பட்டாலும் அது எந்த நிலையில் இருக்கிறது என்ற அடிப்படையில் சிகிச்சை தரப்படும். ஸ்டேஜ் 1, 2 என்பது புற்றுநோயின் ஆரம்பகட்ட நிலை ஆகும். 3, 4 என்பது புற்றுநோய் உடல் முழுவதும் பரவிய நிலை. நோயாளிக்கு தரப்படும் சிகிச்சைமுறைகள் புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.

விதைப்பை சுரப்பிக்கு மட்டும் உட்பட்ட புற்றுநோய், விதைப்பை சுரப்பிக்கு அருகில் பரவிய புற்றுநோய் மற்றும் உடலில் வெவ்வேறு இடங்களில் பரவிய புற்றுநோய் என இதை 3 கட்டங்களாக பிரிக்கலாம்.

விதைப்பை சுரப்பிக்கு மட்டும் உட்பட்ட புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு இவற்றில் எது நோயாளி உடல்நிலைக்கு உகந்ததோ அதை அளிக்கலாம். சரியான முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆரம்பகட்ட விதைப்பை புற்றுநோய் முற்றிலுமாக குணப்படுத்தக் கூடியது. பல நோயாளிகளும் அதையே விரும்புகிறார்கள்.’’

நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

‘‘ஹார்மோன் தெரபி ஆரம்பித்த 3 மாதங்களுக்குப் பிறகு ஐந்து முதல் ஆறு வாரங்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை செய்யப்படும் விதைப்பை புற்றுநோயைக் கட்டுப்படுத்த ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர வேண்டும்.

Metastatic Prostate Cancer கட்டுப்படுத்தக் கூடியது, குணப்படுத்தக் கூடியது. இதற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் கிடைக்கின்றன. பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில்தான் வருகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் சிகிச்சைக்காக வரச் சொன்ன நாட்களில் தவறாமல் செல்ல வேண்டும்.

முதுகு வலி, சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். 3 வாரத்துக்கு ஒரு தடவை கீமோதெரபி என 6 முறை செய்ய வேண்டும். இதனுடன் ஹார்மோன் தெரபி பண்ணுவது அவசியம். கீமோதெரபி பயன் தராவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், விதைப்பை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கென்று புதிதாக எத்தனையோ சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post 12 வயதில் பேக்கரி தொழில்முனைவோர்!(மகளிர் பக்கம்)