வேர்களின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 59 Second

வாசகர் பகுதி

இயற்கையின் படைப்புக்களாகிய மரம், செடி, கொடி ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் நமது உடலில் தோன்றும் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அந்த வகையில் வேர்கள் எண்ணில் அடங்கா பலன்களை அள்ளித்தந்துள்ளது. எந்த செடியின் வேர்கள் என்ன மருத்துவ பலன்களை அளிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

* ஆவாரை வேர்: முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால், ஆவாரை வேரை எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும்.

* கொன்றை வேர்: கொன்றை வேர், கொழுந்து இவற்றை ஊற வைத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டால் மலக்கட்டுத் தீரும்.

* ஆடா தொடா வேர்: ஆடாதொடா வேர் நாலைந்துடன், 1 துண்டு வசம்பு  சேர்த்து ஆரைத்து கட்டி மேல் பூசி வர கட்டி பழுத்து உடையும்.

* நொச்சி வேர்: நொச்சி வேர் ஒருபிடி, வேப்பெண்ணெய் ½ லிட்டர் சேர்த்து மண்சட்டியில் விறகு அடுப்பில் காய்ச்சி மார்பு, விலா, முதுகு ஆகிய இடங்களில் தடவி வர ஆஸ்துமா குறையும்.

* கீழாநெல்லி வேர்: கீழாநெல்லி வேருடன், சீரகம் கொஞ்சம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையை தினமும் சாப்பிட்டு காய்ச்சிய பசும்பால் 1 டம்ளர் குடித்துவர, சிறுநீர் கடுப்பு பிரச்னை நீங்கும்.

* முற்றின வெள்ளைக் கற்றாழை வேர்: வெள்ளை கற்றாழை வேரை நிழலில் உலர்த்தி அதை நன்றாகப் பொடி செய்து நெய்யில் குழப்பி கண்ணில் ஒற்றிக்கொள்ள கண்ணில் உள்ள பூ போகும்.

* தூதுவளை வேர்: தூதுவளை வேரையும், தூதுவளைக் கீரையுடன் ஓமம், பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூதக வாயு சம்பந்தமான வியாதிகள் குணமாகி, மலத்தை இளக்கும்.

* தென்னைமர வேர்: ஈறுகளும், பற்களும் நன்றாகப் பலப்பட, தென்னை மரத்து வேரை உலர்த்திப் பொடி செய்து வெற்றிலை பாக்கில் பொடியை மென்று  தின்ன குணமாகும்.

* ஆலமரத்தின் வேர்: ஆலமரத்தின் இளம் வேர்களுடன், செம்பருத்திப் பூவையும் காய வைத்து இடித்துத் தூள்  செய்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாக வளரும்.

நன்னாரி வேர்: நன்னாரி வேரை கற்றாழைச்சோற்றுடன் கலந்துண்ண விஷக்கடியினால் உண்டாகும் பக்க விளைவுகள் குணமாகும். நன்னாரி வேரையும், ஆலம்பட்டையையும், ஆவாரம்பூவையும் சேர்த்து கஷாயம் செய்து வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் முகத்தில் படரும் கருமை போய்விடும். நன்னாரி வேர், ரோஜா மொக்கு (அ) இதழ், சந்தன சக்கை, ஆவாரம்பூ, பச்சைப்பயறு ஆகியவைகளை சீயக்காயுடன் கலந்து நன்கு அரைத்து வாரம் இருமுறை தலையில் நல்லெண்ணெய்த் தேய்த்து குளித்து வந்தால் எந்த ஷாம்பும் அளிக்க இல்லாத நறுமணம் கமழும் மென்மையான கூந்தலைப் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)
Next post கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு!! (மருத்துவம்)