முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:12 Minute, 48 Second

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை.

பல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்துவிடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும் கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம் ஏன்? முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்?

உளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந்தைக்குப் புகட்டியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தாயிடம் ஒரு குழந்தை முதல் முத்தத்தைப் பெறுகிறது. தாய்க்கும் சேய்க்குமான முத்தப் பரிமாற்றம் குறிப்பிட்ட காலம் வரையே நீடிக்கிறது.

பருவம் வந்து காதல் உணர்வு ஏற்படும்போது அதே முத்தம் எல்லையற்ற இன்பமாய்க் கொண்டாடப்படுகிறது. முதல் முத்தம் தரவும் பெறவும் எவ்வளவு தவித்தோம் என்ற கதை எல்லாக் காதலர்களுக்குள்ளும் புதைந்திருக்கும். முத்தம் பற்றி எண்ணும்போதும், செயல்படுத்தும்போதும் மூளையில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்கிறது. Dopamine, Serotonin ஆகியவை மூளையில் சுரந்து மனிதனுக்கு ஆனந்தத்தையும் உடல்நலத்தையும் அளிக்கிறது.

முத்தத்தை உளவியல் பார்வையில் அணுகினால் மனிதனை மனிதனாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வழி செய்கிறது. ஆண்- பெண் இணைந்து பயணிக்கும் தாம்பத்ய வாழ்வில் மிகுந்த சுவாரஸ்யங்களை அள்ளித் தரும் வள்ளலே முத்தம். முத்தம் உங்களை உற்சாகத்துடனும்
எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்கிறது.

முத்தமிடும் தருணத்தில் இதயத் துடிப்பின் டெசிபில் எகிறுகிறது. சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது. ஆழமான சுவாசிப்பு நுரையீரல் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. உதட்டோடு உதடு வைத்துக்கொடுக்கும் லிப்லாக் மூலம் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சமீபத்தில் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

முத்தம் தம்பதியரின் இடையே அன்பின் பிணைப்பை வலுப்படுத்தவும் செய்கிறது. முத்தத்தில் துவங்கி விளையாடும்போது மூளையில் Oxytocin ஹார்மோன் அளவு அதிகரித்து இணைக்கு மன அமைதியைக் கொடுக்கிறது. இதன் வழியாக நம்பிக்கையும் அன்பும் பெறுகி காமத்துக்கான சூழலை அன்பு மயமாக மாற்றுகிறது.

இதழோடு இதழ் சேர்த்துக் கொடுக்கும் முத்தத்தில் உடலின் கலோரிகள் எரிக்கப்படுகிறது. பாலுறவின்போது திருப்தியை, பேரன்பை வெளிப்படுத்த கழுத்து, கன்னம், இதழ் என முத்தம் பரிமாறுவதால் உடலின் மெட்டபாலிச வேகம் அதிகரித்து, அதிகளவு கலோரி எரிக்கப்படுவதால் உடல் எடையும் குறையும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முத்தமிடும்போது எண்டார்பின் ஹார்மோன் வெளிப்பாட்டினால் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆவதை நேரடியாகவே உணரலாம்.

உடல்வலியையும் முத்தம் போக்குகிறது. கடுமையான வேலைப்பளு, டென்ஷன், தலைவலி, மாதவிடாய்க் காலங்களின் வலிகள் ஆகியவற்றின் போது நம் இணைக்குத் தேவையான முதல் மருந்து முத்தமே. முத்தத்தின் போது உணர்வுகள் தூண்டப்படுவதால் மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற தொந்தரவுகளும் இணைகளை இம்சிக்காது. ரத்த ஓட்டத்தை சீராக்கி எப்போது உற்சாகத்துடன் வலம் வர இணைகள் இருவரும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முத்தம் பரிமாறலாம். காதல் பசியாறலாம்.

முத்தத்தினை காதலின் அளவுகோலைக் கண்டுபிடிக்கும் ஒரு வழியாகவும் புரிந்துகொள்ளலாம். அன்பு அதிகம் இருப்பவர்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள் அல்லது முத்தத்தை அதிகமதிகமாக எதிர்பார்ப்பார்கள். அன்பு இல்லாத பட்சத்தில் முத்தம் கொடுப்பதும் குறையும் அல்லது பெற்றுக் கொள்ள விரும்புவதும் குறையும்.

இன்று பல குடும்பங்களில் கடமைக்காக தாம்பத்யம் நிகழ்வதாகவே பல சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. முத்தமே இல்லாமல் நடைபெறும் காமம் அன்பில் ஏற்படும் வறட்சியையே காட்டுகிறது. இத்தகைய தாம்பத்யம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் அது வெறும் உடல் இச்சையாக மட்டுமே இருக்குமே தவிர அதில் வேறு எந்த சிறப்பும், நன்மையும் இருக்காது. அதேநேரத்தில் தாம்பத்யமே நிகழாவிட்டாலும் முத்தம் மட்டுமே
பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு அந்த முத்தமே அளப்பரிய நன்மையைத் தரும்.

முத்தமிடும் முன் இருவரும் தயாராக வேண்டியுள்ளது. அதற்கான சில ஆலோசனைகள்…

*அவரவர் மனதளவில் காதல் உணர்வுடன் இருக்க வேண்டும்.

*உங்களது வாய் துர்நாற்றம் தவிர்க்க ப்ரஷ் செய்திருப்பது அவசியம். பிடித்தமான உடை, நறுமண ஸ்பிரே என ரொமான்ஸ் மூடில் இருப்பது அவசியம்.

*முத்தத்துக்கு முன்பாக வார்த்தையால், சின்னச் சின்னத் தொடுகையால் வெட்கத்தோடு விளையாடலாம்.

*இதழில் முத்தமிடும்போது இதமான வருடல் மேலும் முத்த இன்பத்தின் அளவைக் கூடச் செய்கிறது.

இனி முத்த வகைகள் சொல்லும் கதைகள்

*உன்னைச் சரணடைந்தேனடி என்ற நிலையே உதட்டு முத்தம். தாம்பத்ய உறவின் துவக்கத்தில் இதழ்களில் இடும் முத்தம் காமத்தின் கதவு திறந்து வைக்கிறது.

*எதிர்பாராத நேரத்தில் சமையல் அறையில் மனைவியை இழுத்து அணைத்து அளிக்கும் முத்தம் அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பின் வெளிப்பாடு.

*அன்றைய சமையல் சூப்பர் என அவளது கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தலாம்.

*அவள் ஏதோ ஒரு வேலையில் இருக்கும்போது அவளறியாமல் பின்னிருந்து அணைத்து காதுமடல் கவ்வி விடுவிக்கலாம்.

*வேலைக்கோ வெளியூருக்கோ பிரிந்து செல்லும்போது சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இதழ் முத்தம் பெண்ணுக்கு பேரின்பம் தருகிறது.

*காலை முதல் மாலை வரை இப்படிக் கணக்கின்றிப் பரிமாறிக் கொள்ளும் முத்தங்களுக்கான பரிசை பெண் தாம்பத்ய வேளையில் திருப்பித்
தருகிறாள்.

*லிப்லாக்கின்போது கண்களை மூடிக்கொண்டு முத்தமிடுவது அந்தத் தருணத்தை ரசனைக்குரியதாக மாற்றுகிறது.

*ஒரு அணைப்பில் இணையக் கைது செய்து கழுத்தில் முத்தமிடுவது நீ இப்போது வேண்டுமென அவளுக்கு உணர்த்தும் செயல்.

*அதிகபட்ச அன்பின் வெளிப்பாடே கண்களில் இடும் முத்தம். இமைப்பொழுதும் உன்னை அகலாதிருக்கவே விரும்புகிறேன் என்பதே
இந்த முத்தம் சொல்லும் அர்த்தம்.

*உச்சி முதல் பாதம் வரை மிச்சமின்றி முத்தமிடுவது பெண்ணை பேரின்ப விளையாட்டுக்குத் தயார்படுத்தும். தாம்பத்ய நேரத்தில் நெருக்கத்தைப் பலப்படுத்தும்.

* தாம்பத்ய உறவின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை பரிமாறிக் கொள்ளப்படும் முத்தங்கள் அதிகபட்ச இன்பத்தை உணர வழி செய்கிறது.

* அடிக்கடி அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிக் கொள்வது முகத் தசைகளை இறுக்கமடையச் செய்து இளமையைத் தக்க வைக்கிறது.

எப்போதும் காதல் குறையாமல் இருக்க…

*உங்கள் இருவரிடமும் ரசனைக்குறிய அழகுகளைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். உங்கள் இணைக்கான பிட் உடைகள், பிடித்த பெர்ஃப்யூம்கள் என பார்த்துப் பார்த்துப் பரிசளித்து ரசித்துச் சொக்க வைக்கலாம். அன்பு மட்டுமே கொண்டாடும் தேன் நிலவில் எல்லைகள்
இன்றிக் காதலியுங்கள்.

* தாம்பத்யத்துக்காக இரவு வரும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. கடிகார நேரம் பார்க்காமல் காதல் மிகும் போதெல்லாம் காமத்தில் மூழ்கிடுங்கள். காதல் வாழ்க்கையில் கிடைக்கும் எந்த ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். பிடித்த உணவு, கவர்ச்சியான இரவு உடைகளும், மணம் மிகுந்த மலர்களும் காமத்தின் சுவை கூட்டும்.

*மென் குரல், வியர்வை வாசனை, இருகக் கட்டிக் கொள்ளும் வேகம், காமப் பொழுதில் ஆணை மிஞ்சிட முயலும் பெண்மை என எது எதுவோ பிடிக்கும். எல்லாம் ரசிக்கலாம். ஒருவரிடம் மற்றவரை ஈர்க்கும் விஷயங்களைக் கண்டிப்பாக காமுறும் தருணத்தில் பகிர்ந்து பரவசப்படுத்துங்கள்.

* உங்கள் இணையுடனான தனிமை நேரங்களில் உங்கள் அலைபேசிச் சிணுங்கலை மியூட்டில் வையுங்கள். உங்களது சீண்டலும் சிணுங்கலும் கரை மீரட்டும். அன்பின் அழைப்பு தவிர மற்ற அழைப்புகளுக்கு என தனி நேரம் ஒதுக்கிடுங்கள்.

* உங்கள் இணையின் அன்பைப் பாராட்டி அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும்படியாகப் பரிசளித்து காலம் முழுக்க காதலும் காமமும் நினைவுகளால் திரும்பத் திரும்பக் கொண்டாடச் செய்யும் அனுபவங்களாக மாற்றிடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?!(அவ்வப்போது கிளாமர்)
Next post மெனோபாஸ் / பெரிமெனோபாஸ் ஆயுர்வேத கண்ணோட்டம்!! (மருத்துவம்)