நீரிழிவு நோய்க்கு ஏற்ற காய்கறிகள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 31 Second

பாகற்காய்: நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகச் சிறந்தது. ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். நீரிழிவு நோயுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட காய்கறிகளை உங்கள் உடல்நிலைக்கேற்ப மருத்துவரை கலந்தாலோசித்தபின் உட்கொள்ளவும்.

வெந்தயக் கீரை: கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய்: வெண்டைக்காயை நறுக்கும்போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும்போது வெண்டைக்காயை இரண்டாகக் கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்: இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce): இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்: மற்ற காய்கறிகளை போன்று காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய்: அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிதான்.

பிரெஞ்சு பீன்ஸ்: பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவை தடுக்கலாம்.

பாகற்காய்: நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகச் சிறந்தது. ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். நீரிழிவு நோயுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட காய்கறிகளை உங்கள் உடல்நிலைக்கேற்ப மருத்துவரை கலந்தாலோசித்தபின் உட்கொள்ளவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதுமையில் பென்ஷன்!(மகளிர் பக்கம்)
Next post சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு…!! (மருத்துவம்)