காய்கறி தோல்களின் பயன்கள்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 50 Second

பொதுவாகவே சில காய்கறிகளை அதன் தோலை நீக்கித்தான் சமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தோல்களை வீசி எறியாமல் அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

*உருளைக்கிழங்கு, வாழைக்காய்: இவற்றைத் தோலோடு சேர்த்து சமைப்பதால், அவற்றில் உள்ள வாயுவுக்கு தோல்களே மருந்தாகின்றன.

*பீர்க்கங்காய்த் தோலை வதக்கி உப்பு, காரம், புளி சேர்த்து துவையல் அரைக்கலாம்.

*பீட்ரூட், கேரட்: இவற்றின் தோலை சுத்தம் செய்து உளுந்தம்பருப்பு, வரமிளகாய், தேங்காய், பெருங்காயம் சேர்த்து, வதக்கி அரைத்து உப்பு சேர்த்து பருப்பு கூட்டு செய்யலாம். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ளலாம்.

*வெள்ளரிக்காய், கேரட், பூசணிக்காய், மாங்காய் போன்றவற்றின் தோலை மேலாக, லேசாக சீவினால் போதும். அவற்றின் தோல்களின் அடியில் நிறைய சத்துக்கள் உள்ளன.

*வேக வைத்த வாழைக்காயின் தோலை நறுக்கி, வதக்கி, தாளித்துவிட்டால் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

*இஞ்சியை சுத்தம் செய்து, தோலுடன் நறுக்கி காய வைத்தால் சுக்கு கிடைக்கும்.

*வெள்ளரிக்காய்த்தோலை அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரைமணி நேரம் கடந்த பின்பு தண்ணீரில் கழுவிக் கொண்டால் சருமத்தின் உள்ளே உள்ள நுண்ணிய துளைகளில் இருக்கும் அழுக்குகளைப் போக்கிவிடும்.

*எலுமிச்சை சாறு சிந்தி, தரை வெள்ளையாக்கி விட்டால், பூசணிக்காய்த் தோலால் தேய்த்துவிட்டு கழுவினால் கறை நீங்கும்.

*வெள்ளரிக்காய்த் தோலால் எவர்சில்வர் பாத்திரங்களைத் தேய்த்தால் சுத்தமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

காய்கறிகளிலும், அவற்றின் தோல்களிலும் நார்ச்சத்து, வைட்டமின், இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைய உள்ளதால், எதையும் வீணாக்காமல் பயன்படுத்துவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையில் பெண்களின் எதிர்பார்ப்புகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளை ஆக்டிவாக்கும் கலர்ஃபுல் ஆக்டிவிட்டிஸ்! (மருத்துவம்)