40+ பெண்களுக்கு ரீவைண்ட் பட்டன் இளமையை மீட்டெடுக்கும் ரீஜெனரேடிவ் சிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 53 Second

‘‘ஒரு டைம் மெஷின் இருந்தா… பத்து வருடம் பின்னோக்கி சென்று இழந்த இளமை பருவத்தை திரும்ப பெற்றால் எப்படி இருக்கும்… இதுதான் இன்றைய நடுத்தர வயது பெண்களின் மனநிலையாக உள்ளது. எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று வேலைக்கு போகும் பெண்கள் மட்டுமில்ைல இல்லத்தரசிகளும் விரும்புகிறார்கள்.

இதற்காக டைம் மெஷின் எல்லாம் தேவையில்லை. சிம்பிளான முறையில் நம்முடைய உடலில் உள்ள அணுக்களைக் கொண்டே இளமையை மீட்டெடுக்கலாம்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் டாக்டர் இளங்கோவன். இன்டர்னல் மருத்துவ சிகிச்சையினை அமெரிக்காவில் முறையாக பயிற்சி பெற்று கடந்த 30 வருடமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

‘‘நான் மருத்துவம் முடிச்சிட்டு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை குறித்து படிக்க விரும்பினேன். 1993ம் ஆண்டு அமெரிக்கா போகும் வாய்ப்பு கிடைச்சது. அங்கு லேசர் மற்றும் போடாக்ஸ் குறித்த சிகிச்சை எல்லாம் எடுத்து வந்தேன். மேலும் நான் மருத்துவம் சார்ந்த ஆய்விலும் ஈடுபட்டு வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக பெண்கள் அழகியல் மற்றும் மூட்டு வலி சார்ந்த பிரச்னையால் அவதிப்பட்டதைப் பார்த்தேன்.

இதற்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல் நம் உடலில் உள்ள அணுக்களை கொண்டு புதுப்பிக்கும் ரீஜெனரேடிவ் மருத்துவம் பற்றி தெரிந்து கொண்டேன். அதில் அழகியலை இணைத்து செயல்பட ஆரம்பித்தேன். இரண்டையும் இணைத்து செயல்படுத்தும் போது நல்ல தீர்வு கிடைச்சது’’ என்று கூறும் டாக்டர் இளங்கோவன் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ரீஜெனரேடிவ் மற்றும் ஏஸ்தெடிக் சிகிச்சை மருத்துவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார். அதற்கான சிகிச்சையினை கடந்த சில வருடங்களாக அளித்து வருகிறார்.

‘‘கத்தியின்றி நம்முடைய உடலில் உள்ள அணுக்களை கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் இந்த சிகிச்சையினை எடுத்துக் கொள்ளலாம். இதில் பல்வேறு முறைகள் உள்ளன. அதாவது ஒருவரின் தலைமுதல் பாதம் வரை அவர்களின் அழகியல் குறித்து அனைத்து பிரச்னைக்கான தீர்வு. பொதுவாக பெண்களின் தலையாய பிரச்னை தலைமுடி உதிர்தல், வெயிலினால் ஏற்படும் கருமை, கருவளையம், முகத்தில் ஏற்படும் சுறுக்கம், மார்பக தளர்வு, அதிக உடல் எடை, குழந்தை பிறப்பால் பிறப்புறுப்பில் ஏற்படும் தசை தளர்வு மற்றும் வறண்ட தன்மை, சிறுநீர்கசிவு பிரச்னை, ஸ்ட்ரெச்மார்க்ஸ் பிரச்னைகள் மற்றும் தாம்பத்திய உறவில் ஏற்படும் சிக்கல்கள் உட்பட அனைத்திற்கும் இதில் தீர்வு காணலாம்.

சருமம் நம் உடலின் ஜன்னல். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறி முதலில் சருமத்தில் தான் வெளிப்படும். ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை. அவர்கள் சருமத்தில் தான் பிரச்னை என்று நினைத்து அதற்கான சிகிச்சை முறைகளை கையாள்கிறார்கள். உதாரணத்திற்கு பிசிஓடி என்று அழைக்கப்படும் கருப்பையில் ஏற்படும் கட்டி.

இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு முகத்தில் அதிகமா முடி வளர்ச்சி, ஹார்மோன் குறைபாடு பிரச்னை இருக்கும். சருமத்தில் உள்ள முடியினை லேசர் சிகிச்சைக் கொண்டு நீக்கினால் அது நிறைய வளர ஆரம்பிச்சிடும். சிலருக்கும் சருமத்தில் பிக்மென்டேஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. அழகியல் சார்ந்த பிரச்னைக்கு ஏற்படும் காரணம் என்ன என்று முதலில் கண்டறிந்து அதை சீர் செய்து அதன் பிறகு சிகிச்சை அளிக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். எந்த ஒரு பிரச்னைக்கான தீர்வு என்பது இன்ஸ்டன்ட் காபி போல் உடனடியாக குணமாக்க முடியாது.

படிப்படியாகத்தான் செய்யணும். சில பெண்கள் சருமம் கருமையாகவும் டல்லாகவும் இருப்பதால் அதை பிரைட்டனிங் செய்ய ெசால்லி வருவாங்க. சருமம் பாதிக்க முதல் காரணம் வெயிலில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள். இது சருமத்தில் உள்ள கொலாஜனை பாதிக்கும். இதனால் சருமம் சுறுக்கம் ஏற்பட்டு பொலிவிழந்து காணப்படும்.

முதலில் பாதிக்கப்பட்ட கொலாஜனை சீர் செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் வெளியே செல்லும் போது, சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தணும். விட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதேபோல் பரு பிரச்னை ஏற்பட காரணங்களான ஹார்மோன் குறைபாடு, சருமத்தில் இன்பெக்‌ஷன், மாதவிடாய் பிரச்னை போன்றவற்றை கண்டறிந்து அதனை சீர் செய்த பிறகு தான் சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்’’ என்றவர் சிகிச்சை முறைகளை பற்றி விவரித்தார்.

‘‘நம்முடைய உடலில் எலும்பு மஜ்ஜை, ரத்தம் மற்றும் கொழுப்புகளில் பல உயிரணுக்கள் உள்ளன. இதில் இருக்கும் ஸ்டெம்செல்களை மட்டும் பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தும் போது, அணுக்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும். புதிதாக செடி முளைக்கும் போது எவ்வாறு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதோ அதே போல் நம்முடைய சருமம் புதுப்பொலிவாக மாறும்.

இது அழகியல் மட்டுமில்லாமல், உடல் ரீதியான பிரச்னை இரண்டையும் கண்டறிந்து குணப்படுத்துவதால், அவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். சிலருக்கு கை, கால் பாதங்கள் மற்றும் அக்குள் பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் மேல் எப்போதும் ஒருவித வியர்வை வாடை இருக்கும். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதற்கும் தீர்வு காணலாம்.

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் முடி உதிர்வது முக்கிய பிரச்னையாக உள்ளது. ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது இயற்கை. அதற்கு மேல் கொட்டும் போது, பொடுகு, கருத்தரிக்கும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றம், வாழ்வியல் மற்றும், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் முடி உதிரும் வாய்ப்புள்ளது. தலை பகுதியில் ஸ்டெம்செல்களை செலுத்தும் போது, அந்த பகுதியில் உள்ள அணுக்கள் புதுப்பித்து முடி உதிர்வதை கட்டுப்படுத்தி மற்றும் புதிதாக முடி வளர உதவி செய்யும். அதே சமயம் தலைமுடியில் வேர்கால்கள் பாதிப்படைந்து முழுமையாக வழுக்கை ஏற்பட்டு இருந்தால், ஹேர் டிரான்ஸ்பிளான்ட் அல்லது மைக்ரோபிக்மென்டேஷன் தான் ஒரே தீர்வு.

மைக்ரோபிக்மென்ேடஷன் சிகிச்சை… சிலருக்கு புருவம் மற்றும் தலையில் முடிகள் கொட்டி அடர்த்தி இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு டாட்டூ போடுவது போல் சின்னச்சின்ன புள்ளிகளை நெருக்கமாக அங்கு முடி இருப்பது போலவும், அடர்த்தியான தோற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றவர் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ரீஜெனரேடிவ் சிகிச்சை முலம் அவர்களின் உடல் அமைப்பை மாற்றி அமைக்க முடியுமாம்.

‘‘உடல் எடையை குறைத்த பிறகு அவர்களின் தசைகள் வலுவிழந்து வயதான தோற்றம் ஏற்படும். இதற்கு தசை இறுக்கம் செய்வதால், அவர்கள் என்றும் இளமையான தோற்றத்தினை பெற முடியும். சிலர் ஒரே மாதத்தில் 10 கிலோ எடையினை குறைப்பார்கள். அவ்வாறு இல்லாமல் நாங்க சொல்லும் சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றினால் மாதம் ஒரு கிலோ என்று எடை குறைத்து என்றும் இளமையான தோற்றம் பெறலாம்.

முப்பது முதல் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்கள் பலர் ஓ.ஷாட் சிகிச்சையினை மேற்கொள்ள விரும்புகிறார்கள். பொதுவாக கர்ப்ப காலத்தில் வயிறு பகுதி விரிவடைந்து, குழந்தை பிறந்த பிறகு அந்த பகுதியில் உள்ள தசைகள் வலுவிழந்து தொய்வு ஏற்படும். சிலருக்கு மார்பகங்கள் தளர்ந்து போகும். குழந்தை பிறப்புக்கு பிறகு பெண்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை பிறப்புறுப்பில் ஏற்படும் தசை தளர்வு, வறண்ட தன்மை மற்றும் சிறுநீர் கசிவு, விளைவு தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியின்மை.

ஓ.ஷாட் சிகிச்சை மூலம் தசைகளை இறுகச் செய்து, அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தை மீட்டெடுக்க முடியும். அடுத்து வாம்பயர் சீரிஸ் சிகிச்சை. அமெரிக்காவில் மிகவும் பிரபலம். இந்த சிகிச்சையினை அறிமுகம் செய்த டாக்டர் சார்லஸ் ரூனெல்ஸ் என்பவரிடம் முறையாக பயிற்சி பெற்றிருக்கிறேன். இந்த சிகிச்சை முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது அமெரிக்கா சென்று தெரிந்து கொண்டு வருகிறேன். மருத்துவ துறையை பொறுத்தவரை அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அப்டேட்டாக இருப்பது அவசியம்.

இதில் பேஸ்லிப்ட், ஃபேஷியல், பிரஸ்ட் லிப்ட் மற்றும் விங் லிப்ட் என பல சிகிச்சை முறைகள் உள்ளன. இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் சுறுக்கம், கருவளையம், கண்களுக்கு கீழ் தோன்றும் பைகள், குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்டுள்ள உடலமைப்பு மாற்றம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சையின்றி சீர் செய்து இளமையான தோற்றம் பெறலாம். இதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அதை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் பாதிப்பு ஏற்படும். இந்த சிகிச்சையை பொறுத்தவரை முறையாக அங்கீகாரம் பெற்ற மருத்துவரையே அணுக வேண்டும்’’ என்றவர் சிகிச்சைக்கு பிறகு எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.

‘‘பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் தான் பெண்கள் இந்த பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையினை மேற்கொள்ளலாம். மேலும் அவரவர் பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். எந்த பிரச்னையாக இருந்தாலும் முதலில் உடல் ரீதியாக உள்ள பிரச்னைகளை கண்டறிந்து அதன் பிறகு தான் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரணுக்கள் செலுத்திய பிறகு அது மீண்டும் புத்துயிர் பெற்று மாற்றங்கள் இரண்டு வாரங்கள் கழித்து தான் தெரியவரும். சில பெண்கள் கல்யாணத்தின் ேபாது இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

அதன் பிறகும் பராமரிக்க விரும்பினால், ஆறு மாதமோ அல்லது ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். மேலும் நம் உடலில் உள்ள அணுக்களை எடுத்து செலுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படாது.

எல்லாவற்றையும் விட இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள தரமான கருவிகள் அவசியம். சிகிச்சை குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 8754588885 என்ற எண் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றார் டாக்டர் இளங்கோவன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app!! (மருத்துவம்)
Next post ஆரோக்கியமான உறவிற்கு ‘முன்னால்’ விளையாடுங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)