சேர் யோகா!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 51 Second

ஃபிட்னெஸ்

அழகான தோற்றத்தையும், நோயற்ற வாழ்வையும் தரும் யோகாவை செய்ய அனைவருக்கும் விருப்பம்தான். இருப்பினும், மூட்டுவலி உள்ள சிலருக்கு தரையில் அமர்ந்து செய்வது சிரமமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் வீட்டினுள்ளேயே செய்வதற்கு ஏற்றதாகவும், அதே சமயத்தில் யோகாவில் பெறும் முழு பயனையும் பெறும் வகையில், நாற்காலிகளை வைத்தே எளிதாக செய்யும் சில ஆசனங்களை இங்கே விளக்குகிறார் யோகா பயிற்சியாளர் சம்பத்குமார்.

தட்டையான வயிறுக்கு…

1. இரண்டு சேர்களை நேருக்கு நேர் போட்டு, ஒரு சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். எதிரே உள்ள சேரில் ஒரு போர்வையை நான்காக மடித்து வைக்க வேண்டும். கால்களை மெதுவாக மேலே தூக்கி பாதங்களை போர்வையின் மேல் வைக்கவும். பாதங்கள் உள்நோக்கி பார்த்தபடி இருக்கட்டும்.

2. இப்போது இரண்டு கைகளாலும் எதிரில் உள்ள சேரின் பக்கவாட்டில் பிடித்துக் கொண்டு மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும்.

3. அதே நிலையில் 2 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

4. பிறகு மூச்சை மெதுவாக வெளியே விட்டவாரே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். வயிற்று தசைகள் வலுவடைவதால்
அதிகமாக உள்ள கொழுப்பு கரைந்து தட்டையான வயிறைப் பெறமுடியும்.

பலன்கள்:

1. குடல், பித்தப்பை, இரைப்பை நன்கு அழுத்தம் பெறுகின்றன.
2. தொப்பை குறைந்து அழகு பெறும்.
3. கெண்டைக்கால் சதை வலுவடையும்.
4. நீரிழிவு, வயிற்றுவலி நீங்கும்.
5. முதுகு தண்டுவடம் வலிமை அடையும்.

இடுப்பு வலுவடைய…

1. இரண்டு நாற்காலிகளையும் எதிரெதிரே போட்டு ஒரு நாற்காலியில் நேராக அமரவும்.

2. வலதுகாலை எதிரில் உள்ள நாற்காலியில் எடுத்து வைக்கவும்.

3. பாதங்கள் முழுங்காலை நோக்கி இருக்கும்படி அமா்ந்து இரண்டு கைகளாலும் நாற்காலியின் பக்கவாட்டில் பிடித்துக் கொள்ள வேண்டும். வலதுகால், வலது முட்டி, வலதுபுற இடுப்பு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி உட்காரவும். இடது காலை தரையில் ஊன்றிக் கொண்டு மூச்சை உள்நோக்கி இழுக்கவும். இடுப்பை நேராக வைத்திருக்கவும்.

4. இப்போது முழங்கால் முட்டியால் தொடைப்புறம் நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். இதே நிலையில் 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். இதேபோல இடதுகாலை சேரில் வைத்து வலது காலை தரையில் ஊன்றி செய்ய வேண்டும்.

பலன்கள்:

1. இடுப்பிலிருந்து உள் தொடை வரை முக்கியமான ஐந்து தசை குழுக்கள் உள்ளன. பெண்களின் இடுப்புத்தசைகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் எடை தூக்கும் போது இந்த தசைகள் தொடைப்பகுதியின் உள்நோக்கி இழுக்கப்பட்டு வலியை ஏற்படுத்தும். இந்த இடுப்பு தசைகளை வலுவடையச் செய்வதில் மேலே குறிப்பிட்ட ஆசனம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஆசனத்தை செய்து பாருங்கள்…கொடி இடையாள் நீங்கள்தான்.

தொடை அழகுக்கு…

1. பெண்களின் அழகான வளைவுகளுக்கு தொடைப்பகுதியில் அமைந்துள்ள தசைகள் முக்கியமானவை. இரண்டு நாற்காலிகளை அருகருகே வைக்கவும். இடப்புறம் உள்ள நாற்காலிக்கு எதிரில் நின்று கொள்ளவும்.

2. இப்போது வலது காலை உயர்த்தி வலதுபுறம் உள்ள நாற்காலியில் வைக்கவும். இடதுகாலை முன்னோக்கி கொண்டு வந்து நிற்கவும்.

3. இப்போது முன்னோக்கி குனிந்து இடதுபக்க நாற்காலியை பிடித்துக் கொண்டு வலதுகால் முட்டியால் தொடையை நோக்கி அழுத்தம் கொடுக்கவும்.

4. இதேபோல் வலதுபக்கம் நின்று கொண்டு இடதுகாலை இடப்புறம் உள்ள நாற்காலியில் வைக்கவும். முன்னர் சொன்னது போல வலது நாற்காலியைப் பிடித்துக் கொண்டு இடதுகால் முட்டியால் தொடையை நோக்கி அழுத்தம் கொடுக்கவும். தொடை தசைகள் வலுப்பெற இந்தப் பயிற்சி முக்கியமானது. தொடையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பு குறைந்து அழகான தொடையை பெறலாம்.

பலன்கள்:

1. தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைவதால். ஸ்லிம்மான தோற்றத்தை கொடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்ச்சி தரும் சுரைக்காய்!! (மருத்துவம்)
Next post பவன முக்தாசனம்!! (மகளிர் பக்கம்)