கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 32 Second

* உருளைக்கிழங்கை சீவி, உப்புத்தண்ணீரில் ஊற வைத்து உலர்த்தி, பிறகு எடுத்து வறுத்தால், வறுவல் மொறுமொறுவென்று சூப்பராக இருக்கும்.

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்தால் ஏல மணத்தோடு அருமையாக இருக்கும்.

* கொத்தமல்லித் தழையை சிமெண்டு தரையில் வைத்து ஒரு கிண்ணத்தால் மூடி வைத்தால் மூன்று நாள் ஆனாலும் பச்சை பசேல் என்று வாடாமல்,
வதங்காமல் பசுமையாகவே இருக்கும்.

– ஆர்.கீதா, திருவான்மியூர்.

* தக்காளி சட்னி செய்யும்போது சிறிது வெள்ளை எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் மணம் தூக்கலாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

* தோசை வார்க்கும்போது தோசை ரொட்டிபோல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு, மாவுடன் கலந்து தோசை வார்க்க தோசை மிருதுவாக இருக்கும்.

* கடலைப்பருப்பு போளி செய்யும்போது வெல்லத்துக்குப்பதில் பொடித்த சர்க்கரையைச் சேர்த்தால் போளி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

* பணியாரம் மாவில் 2 டேபிள் ஸ்பூன் பொடி செய்த ஓட்ஸ் கலந்தால் பணியாரம் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் சிறிது அரிசியை வறுத்து நைசாக அரைத்து குழம்பில் கலந்துவிட்டால் அதிகப்படியான உப்பு குறைந்துவிடும்.

* பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, ஃப்ரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்திருந்த பின் நறுக்கினால், பால் போன்ற பிசின் கையில் ஒட்டாது.

* பழுத்த தக்காளியை 5 நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு வெட்டுங்கள். பழம் பிய்ந்து போகாது.

– கே.ராகவி, வந்தவாசி.

* கோதுமை மாவுடன் சம அளவு பார்லியையும் சேர்த்து செய்யும் சப்பாத்தி சுவையாக இருக்கும்.

* பாகற்காய் சாம்பார் செய்யும்போது 3 அல்லது 4 துண்டு மாங்காயைச் சேர்த்து செய்தால் பாகற்காயின் கசப்பு அகன்று விடும். ருசியும் தூக்கலாக இருக்கும்.

* பொரியல் செய்யும்போது தேங்காய்க்குப் பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்துப் பொடி செய்து பொரியலில் தூவினால், தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.

– அபர்ணா சுப்பிரமணியம், சென்னை.

* கேக் செய்யும்போது சிறிதளவு தேன் சேர்த்தால் அதிகமான மென்மையான சுவை இருக்கும்.

* ரொட்டி கெட்டியாகி விட்டால் அதை ஆப்பச்சட்டியில் சிறிது நேரம் வைத்து சூடாக்கினால் மென்மையாகி விடும்.

– கே.ஆர்.ரவீந்திரன், சென்னை.

* ரவையை வெறும் வாணலியில் சிறிது சிவப்பாக வறுத்து நன்றாக ஆறவிட்டு பின் டப்பாவில் போட்டு வைத்தால், ரவையில் பூச்சி வராது. நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.

* காம்பு கிள்ளாத வெற்றிலையை இட்லி மாவில் போட்டு வைத்தால் இரண்டு நாள் ஆனாலும் மாவு புளிக்காது.

* கறிவேப்பிலையை ஓர் அலுமினிய பாத்திரத்தில் போட்டு கவிழ்த்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.

– எல். தீபிகா, திருவான்மியூர்.

* ஃப்ரீசரிலிருந்து பாலை எடுத்து காய்ச்சும்போது, பால் பாத்திரத்தில் சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து கீழே ஊற்றி விட்டு பிறகு பாலை காய்ச்சினால் அடி பிடிக்காது.

* கிரேவி செய்யும்போது தண்ணீருக்குப் பதில் சிறிது பால் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

* அரைக்கீரையை பொடிசா நறுக்கி பாகற்காயுடன் சேர்த்து வதக்கினால் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.

– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

* கறிவேப்பிலை அதிகம் கிடைக்கும் நாட்களில் பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம், குழம்பு செய்யும்போது 1 டீஸ்பூன் சேர்த்தால் சுவையாகவும், மணமும் கூடும். சுடு சாதத்தில் 1 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* தோசைக்கு அரைக்கும் மாவில் 1 கைப்பிடி துவரம்பருப்பு சேர்த்து அரைத்தால் தோசை பொன்னிறமாய், மொறுமொறுப்பாய் இருக்கும்.

– எஸ்.மீனாட்சி, வேலூர்.

* எலுமிச்சம் பழரசம் வைக்கும்போது ஒரு மாறுதலுக்காக மிளகு, சீரகப் பொடியைசேர்த்து செய்து பாருங்கள். சுவையே சுவை.

* மிளகு ரசம் செய்யும்போது மிளகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் வறுத்து அரைத்து உடன் தக்காளி சேர்த்து ரசம் வைத்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

* வெண்ணெய் காய்ச்சும்போது பாத்திரத்தில் வைத்து அடிக்கடி கரண்டியால் கிளறி பிறகு பிரவுன் கலர் வந்தவுடன் சிறிதளவு பால் சேர்க்க மணல் மணலான நெய் கிடைக்கும்.

– ராஜி குருசாமி, ஆதம்பாக்கம்.

* எந்த துவையலும் மீந்துவிட்டால் வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கினால் மறுநாளும் சுவையாக இருக்கும்.

* கோஸ், கேரட், பீன்ஸ் காய்கறி பொரியல் மீந்துவிட்டால் அதனுடன் இட்லி மிளகாய்ப் பொடியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், சுவையான வெஜிடபிள் சட்னி தயார்.

* ஸ்வீட் மீந்து விட்டால், மைதா அல்லது கோதுமை மாவை பூரிக்கு பிசைவதுபோல் பிசைந்து, வட்டமாக இட்டு, அதனுள் இனிப்புகளை வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான இனிப்பு சோமாஸ் தயார்.

* குலோப் ஜாமூன் பாகு மீந்து விட்டால், மைதாவை பிசைந்து சப்பாத்தி மாதிரி எட்டு சதுரம் துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரித்து இதில் போட்டு எடுத்தால் இனிப்பு பிஸ்கெட் ரெடி.

– எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை.

* உருளைக்கிழங்கை நறுக்கி, ஒரு துணியில் முடிந்து, கொதிநீரில் 5, 6 நிமிடங்கள் முக்கி, எடுத்துவிட்டு, உப்பு கரைத்த நீரில் 5 நிமிடங்கள் மூழ்கவிட்டு எடுத்து பிறகு பொரித்தால் சுவை கூடும். மொறு மொறுவென்று இருக்கும்.

* தக்காளிப் பழங்களை துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி, பொடித்து வைத்துக்கொண்டால் ரசம், குழம்பு, சூப் என்று தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

* பட்டாணி, கீரைகள், முட்டைக்கோஸ் இவை வேகும்போது சிறிது சர்க்கரையும், வெந்தபின் உப்பும் சேர்த்தால் சுவை கூடும்.

– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீ ரங்கம்.

* வெங்காயம், வெள்ளைப்பூண்டின் மீது சிறிது எண்ணெய் தடவி வெயிலில் காய வைத்தால் சுலபத்தில் தோலை நீக்கி விடலாம்.

* புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)
Next post எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!! (அவ்வப்போது கிளாமர்)