கலர்ஃபுல் குவில்லிங் மோதிரம்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 0 Second

கல்லூரி பயிலும் இளம் பெண்களே! செமஸ்டர் எக்ஸாம்ஸ் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருக்கும் நேரம் இது. தோழிகளோட மாலுக்கும், சினிமாவுக்கும் போக ப்ளான் போட்டிருப்பீங்க! வெளியில் சென்றது போக, உங்களுக்கு எக்கச்சக்கமா கிடைக்கும் நேரத்தில் இங்கே எளிமையான முறையில் கற்றுத்தரப்படும் குவில்லிங் நகைகள் செய்து வைத்துக்கொண்டால், காலேஜ் திறந்தவுடன் டிசைன் டிசைனாகப் போட்டு உங்கள் தோழிகள் காதில் புகையை வரவழைக்கலாம். வாங்க இந்த வாரம் கலர்ஃபுல் குவில்லிங் மோதிரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கலர்ஃபுல் குவில்லிங் மோதிரம்

தேவையான பொருட்கள்

1. 3 mm குவில்லிங் பேப்பர் – பிங்க் மற்றும் மஞ்சள் கலர்
2. வெள்ளை பசை (ஒட்டுவதற்கு)
3. வெள்ளை குட்டி முத்து மணிகள் – சிறிதளவு
4. குவில்லிங் ஊசி
5. ஜிமிக்கி மோல்டு
6. மோதிர ப்ளைன் பேஸ்.

1. பிங்க் 2 முழு நீள 3 mm குவில்லிங் பேப்பரை ஒட்டவும்.

2. குவில்லிங் ஊசியில் குவில்லிங் பேப்பரை அடுக்காக சுற்றி முடிக்கும் போது சிறிது கம் தடவி ஒட்டவும்.

3. அதை ஜிமிக்கி மோல்டை பின்பக்கம் திருப்பி வைத்து ஷேப் கொடுக்கவும். ஷேப் மிகவும் உயரமாக இருந்தால் முன்பக்கம் திருப்பி வைத்து அதை அட்ஜஸ்ட் செய்யலாம்.

4. 3 mm மஞ்சள் குவில்லிங் முழு நீள பேப்பரை பாதியாக கட் செய்து கொள்ளவும். அதை குவில்லிங் ஊசியால் சுற்றி வட்டமாக்கி முனையை ஒட்டவும்.

5. இதே மாதிரி 5 pieces செய்து காயவைக்கவும்.

6. இதை பிங்க் ஷேப் செய்ததன் கீழ்புறம் நெருக்கமாக ஒட்டவும். (படம் பார்க்க) மோதிர டிசைன் ரெடி.

7. வெள்ளை நிற குட்டி தட்டை வடிவ முத்துக்களை (இட்லி முத்து என்று கேட்டு வாங்கவும்) அந்த ரோல்களின் மீது ஒட்டவும்.

8. இதன் பின்புறம் மோதிர பேஸை ஒட்டி காயவிடவும். சூப்பரான மோதிரம் ரெடி. இதை பெரியதாகவும், சின்னதாகவும் நம் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்ளலாம்.

மோதிர பேஸூம் சிறியவர், பெரியவர்களுக்கு என தனித்தனியாக விற்கிறது. விரலுக்கு ஏற்ப அட்ஜஸ்டபிள் மாடலும் வருகிறது. வண்ணங்கள், டிசைன்கள் மாற்றி குவில்லிங் நகைகள் செய்து உங்கள் கிரியேட்டிவிட்டிக்கும் நல்ல தீனி கொடுக்கலாம். 200 ரூபாய்க்குள் குவில்லிங் செட் முழுவதும் ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கிறது.

முதலில் சிறிய அளவில் செய்து பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் தனித்தனியாக செலவு செய்யத் தேவையில்லை. அந்த பேலட்டை வாங்கி பயன்படுத்தலாம். Less money more enjoyment. என்ன குவில்லிங் நகைகள் செய்ய நீங்க ரெடி தானே. அடுத்த இதழில் கிளிப் வகைகள் செய்வது குறித்துப் பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கையிலே கலை வண்ணம்!! (மகளிர் பக்கம்)
Next post உடல் பருமன் நோய் Obesity !! (மருத்துவம்)