உங்களுக்கு தையல் தெரியுமா? (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 6 Second

உங்களுக்கு தையல் தெரியுமா?*தையல் மிஷினை மாதமொருமுறை எண்ணெய் போட்டு துடைக்க வேண்டியது அவசியம். எண்ணெய் போடும் முன் இயந்திரத்தில் உள்ள நூல், அழுக்கு, தூசிகளை பிரஷ் கொண்டு எடுத்து விட வேண்டும்.

*தையல் மிஷின் டிராயரில் ஒரு பின்குஷனில் சில குண்டூசிகள், ஊசிகள் குத்தி வைத்தால் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்.

*ஒரு காந்தத் துண்டினையும் வைத்திருந்தால் ஊசிகள் எங்கு கிடந்தாலும் எடுத்து விடலாம்.

*தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பு ஊசியில் சிறிது சோப்பு தடவினால் ஊசிகள் உடையாமல் இருக்கும்.

*ஊசிகளின் முனை மழுங்கி விட்டால் உப்புத் தாளில் பல முறை குத்தி எடுத்தால் கூர்மையாகி விடும்.

*கத்தரிக்கோல் மழுங்கி விட்டால் உப்புக் காகிதத்தை கத்தரியால் கத்தரித்தால் கூர்மையாகி விடும்.

*தையல் மிஷின் பெல்ட் நீளமாக இருந்தால் குளிர்ந்த நீரில் அதை அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு வெயிலில் காயவைத்தால் சரியாகி விடும்.

*ஊசிகள் வைக்கும் டப்பாவில் சிறிது ஸ்டீல்உல்லை நிரப்பி வைத்தால் ஊசிகள் துருப்பிடிக்காது.

*பிளாஸ்டிக் ஷீட் போன்றவற்றைத் தைக்கும்முன் அதன் மேல் மெழுகு தடவிய காகிதத்தை வைத்துத் தைத்து விட்டு பிறகு அந்தக் காகிதத்தைக் கிழித்து விட்டால் பிளாஸ்டிக் ஷீட் கிழியாது.

*ஜிப் வைத்துத் தைப்பதற்கு முன் செலோஃபென் டேப் கொண்டு ஒட்டி விட்டு பிறகு எளிதாக தைக்கலாம்.

*தையல் மிஷினை சுத்தப்படுத்த டர்பன்டைன் ஆயிலைப் பயன்படுத்தலாம். எண்ணெய் போட்ட பின்பு ஒரு துணியில் சிறிது நேரம் தைத்து விட்டு பின்பு உறையினால் மூடி வைக்க வேண்டும்.

*தைக்கும் போது கையை ஒரு சிறிய குஷன் தலையணை மேல் வைத்துக் கொண்டு தைத்தால் வலிக்காது. அவ்வப்போது மரம், செடிகளைப் பார்க்க வேண்டும், பார்வையைத் திருப்ப வேண்டும். இப்படிச் செய்தால் கண்கள் களைப்படையாது.

*தையல் மிஷினைப் பயன்படுத்தாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது. அவ்வப்போது தைக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளின் உடலில் முடி? (மருத்துவம்)
Next post பட்டுநூல் ஆபரணங்கள்!! (மகளிர் பக்கம்)