நோர்வே புலிகளைத் தடைசெய்யவேண்டும் – பாதிக்கப்பட்ட நோர்வே தமிழர்

Read Time:3 Minute, 1 Second

norweflagnew.gifநோர்வேயில் செயற்படும் தமிழர் ஜனநாயக அமைப்பின் தலைவரான திரு சிவராஜா ராஜசிங்கம் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகள் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என அடையாளங்கண்டு தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நோர்வேயும் அந்நாடுகளைப் பின்பற்றி புலிகளுக்கு எதிரான தடையினை மேற்கொள்ளவேண்டுமென வற்புறுத்தியுள்ளார்.

தாயகத்தில் புலிகளின் வன்முறைகளுக்கும், கொலைவெறியாட்டத்திற்கும் அஞ்சியநிலையில் புலம்பெயர்ந்து நோரவேயில் வாழும் தமிழர்களை நோர்வேயில் புலிகளின் தரகர்களாகப் பணியாற்றுபவர்கள் அச்சுறுத்தவதாகவும், புலிகளுக்கு நிதியுதவி வழங்க மறப்பவர்களின் பெயர்ப்பட்டியல்களை வன்னியிலுள்ள புலிகளின் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நோர்வேயில் வாழும் தமிழர்களின் தாயக உறுவுகளையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அவர்களைப் பலவகையிலும் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக நோர்வே பொலிஸாரிடம் திரு ராஜசிங்கம் அவர்கள் முறையீடு செய்தபோதும், அவரின் முறையீடு தொடர்பாக பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பொலிஸாருக்கு எதிராக வழக்கு ஒன்றினை திரு ராஜசிங்கம் அவர்கள் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதுவிடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எமது நோர்வே நிரூபர் கூறுகையில் சாமாதான முன்னெடுப்பாளர்களாக கடந்த நான்கு வருடகாலம் பணியாற்றிய நோர்வேயின் கண்காணிப்பின்போது ஏறக்குநறய 1083 தமிழர்கள் பலிகளினால் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இக்காரணங்களை முன்வைத்து புலிகளைத் தடைசெய்யவேண்டிய கடமைப்பாடு நோர்வே அரசாங்கத்திற்கும் உள்ளதென மக்கள் கூறுவதாகத் தெரிவிக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐக்கிய தேசியக்கட்சியின் குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி விளக்கம்
Next post மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்