சிறுநீரகக் கற்கள் எதனால் உருவாகிறது? (மருத்துவம்)

Read Time:3 Minute, 50 Second

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு முக்கியமானதொரு காரணம் போதுமான அளவில் தண்ணீர் குடிக்காததுதான். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளும்போது நம் உணவின் வழியாக நாம் உட்கொண்ட நச்சுப்பொருட்கள் அல்லது அவற்றில் உள்ள தேவையற்ற உப்புகள் சிறுநீர் வழியே வெளியேறி விடுகிறது. ஆனால் தண்ணீர் சரி வர குடிக்காத போது உடலில் உள்ள உப்பு முழுவதும் வெளியேறாமல் சிறிது சிறிதாக கற்களாக மாறிவிடுகிறது.

* சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு மற்றுமொரு காரணம் சிறுநீரை அடக்கிக்கொள்வது. சரியான இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவது, சிறுநீரை அடக்குவதை தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வது தவறானது.

* சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான வழிகள் ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகப்படியாக உள்ளன. ஆரம்ப நிலையில் அல்லது கற்களின் அளவைப் பொறுத்து முறையாக சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க முடியும்.

* சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு சிகிச்சையின் போதே நிறைய தண்ணீர் உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவர். சிகிச்சை முடிந்து கற்கள் கரைந்த பின் சரியான அளவு தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

* காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட உணவை அதிகம் விரும்பி உண்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். அவ்வாறு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள உப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். கற்கள் உருவாகாது.

* சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் விதைகள் உள்ள காய்கறிகள், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள் இவற்றை குறைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக தக்காளியை தவிர்ப்பது அவசியம். தவிர்க்க முடியாதவர்கள் அதில் உள்ள சதை பாகத்தை நீக்கிவிட்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* சிகிச்சையின் போது இடையிடையே வாழைத்தண்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

* ஆயுர்வேதத்தில் உள்ள கற்களை கரைக்கும் மூலிகைகள் பாஷாணபேதி, சிறுநெருங்சில்முள், மூக்கிரட்டை மூலிகை போன்றவற்றில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர கற்கள் கரைய ஆரம்பிக்கும்.

* சிறுநீரகக் கற்களின் அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனாவுக்கு ஆண்கள்னா ரொம்ப இஷ்டம்! (மருத்துவம்)
Next post கொழும்பில் இரவில் பிரேத ஊர்வலம் !! (கட்டுரை)