இதய நோய்களை விரட்டுங்கள்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 45 Second

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து அதன் விட்டம் குறுகுவதாலும் மற்றும் இதயத்தமனிகளில் ரத்தம் உறைந்து போகும் நேரங்களிலும் இதய தாக்குதல் தவிர்க்க முடியாததாகிறது. மனித உடலில் உள்ள லிப்போ புரோட்டீன் என்ற கொழுப்பு புரதங்கள் உயர்ந்த அடர்த்தி மற்றும் தாழ்ந்த அடர்த்தி என இருவகையாக உள்ளன. இவற்றில் தாழ்ந்த அடர்த்தி லிப்போ புரோட்டீன் தான் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை. இதனுடன் கொழுப்பு சேரும் போது ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பு ஏற்பட்டு சிக்கலை ஏற்படுத்துகிறது. மாறாக உயர்ந்த அடர்த்தி லிப்போ புரோட்டீன்களுடன் கொழுப்பு சேரும் போது இதயநோய் தவிர்க்கப்படுகிறது.

இதயம் அல்லது மூளை கோளாறு காரணமாகவே பெரும்பாலான மரணங்கள் நிகழ்கின்றன. இந்த இரண்டில் முதன்மையானது எது என்று பார்க்கும்போது, இதய நோயால் இறப்பவர்களே அதிகம். மீன், மீன் பொருட்களை அதிகளவில் சேர்த்துக்கொண்டால், இதயநோயை விரட்டியடிக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாழ்ந்த அடர்த்தி லிப்போ புரோட்டீன்களின் அளவு குறைவாக உள்ள உணவு பொருட்களில் மீன் வகைகள் முதலிடம் வகிக்கிறது. இதயத்திற்கு ஏற்ற அரியவகை உணவாக மீன் உள்ளதென உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரத்தக்குழாய்களில் படிந்துள்ள லிப்பிடுகளை குறைக்கவும், பல்வேறு காரணங்களால் ரத்தம் உறைவதை தவிர்க்கவும் மீன் எண்ணெய் சிறந்ததாக கருதப்படுகிறது. மீன் உணவு உண்போர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அவர்களுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனர். இது தவிர புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களை தவிர்ப்பதும் சீரான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை அவரவர் உடல் நலனுக்கேற்ப மருத்துவர் அல்லது பயிற்சியாளர் ஆலோசனையுடன் கடைப்பிடித்தால் வராது இதயநோய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேப்ஸ்யூல்: மீன் எண்ணெய் மாத்திரை!! (மருத்துவம்)
Next post பழங்கால பொருட்களை திருடி விற்கும் கூட்டம்!! (வீடியோ)