ஓரங்க நாடகம் !! (கட்டுரை)
இது ஒருவர் நடத்தும் நாடகமா என்று தோன்றுகிறதல்லவா? கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (TLP) கட்சி, பிரான்ஸ் நாட்டில் முகமது நபி அவர்களின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதன் காரணமாக, பிப்ரவரி 2021 க்குள், பிரான்ஸின் தூதுவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் படுவார் என்று எழுத்து மூலம் உறுதியளித்தது.
2021 பிப்ரவரி மாதமும் வந்தது. ஆயினும் பாகிஸ்தானிய அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற ஏப்ரல் 20 ம் திகதி வரை அவகாசம் கேட்டது. அதற்கு TLPயும் ஒப்புக்கொண்டது. ஆனால் காலக்கெடு முடிவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர், அதாவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தங்கள் தலைவர் சாத் உசேன் ரிஸ்வி கைது செய்யப்பட்டதன் மூலம் ஆத்திரமடைந்த TLP ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கொலைவெறியுடன் பாதைகளில் திரண்டனர்.
அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களை மேற்கொள்ள நேரிடும் என்று ரிஸ்வி அச்சுறுத்தி இருந்த போதும், சற்று வித்தியாசமாக, அவரின் ஆதரவாளர்கள் இரண்டு நாட்களின் பின்னரே கலகங்களில் குதித்தனர்.
அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முதல் நாளில் (ஏப்ரல் 12), சில நகரங்களின் நெடுஞ்சாலைகளையும் மற்றும் பாதைகளையும் மறித்து கலகத்தடுப்பில் ஈடுபட்ட ஒரு காவல் துறை அதிகாரியையும் கொன்றனர். காவல் துறையினரோடு ஏற்பட்ட மோதல்களில் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் கொல்லப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத், TLP யை தடை செய்ய பரிந்துரைக்கப்போவதாக அறிவித்தார். பிரெஞ்சு தூதுவரை வெளியேற்றும் பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல அரசாங்கம் முனைந்தது.
ஆனால் TLP யோ அனைத்து ஐரோப்பிய நாட்டுத் தூதுவர்களையும் வெளியேற்ற வேண்டுமென்று பிடிவாதமாய் இருந்தது என்று அமைச்சர் கூறினார். அதைத் தொடர்ந்து, TLP தடைசெய்யப்பட்டதாக ஒரு ஒரு மாயை உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் வங்கிக் கணக்குகள், அதன் தலைமையகம் மற்றும் நாட்டின் பிற அலுவலகங்கள் மற்றும் மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் உறுப்பினர்கள் பற்றி எவ்விதமான தகவல்களும் அங்கே அறிந்துகொள்ள முடியவில்லை. இதுவரை நடைபெற்ற வன்முறைகளில், நான்கு காவற்றுறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர், 11 பேர் கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் 800 பேர் காயமடைந்தனர்.
2017 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (N) போன்ற கட்சிகளை அரசியல் களத்தில் இருந்து ஓரம் கட்டுவதற்காக, இராணுவம் இஸ்லாமிய குழுக்களை பிரதான ஆயுதமாகப் பாவிக்க முயன்ற அந்த சூழ்நிலையில் தான் TLP கட்சி தேர்தல் ஆணையத்தால் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 62 மற்றும் 63 வது பிரிவுகளின் கீழ், அவர் ஒரு நல்ல இஸ்லாமியர் அல்ல எனவும், எனவே அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என்ற அடிப்படையில் பனாமா ஆவணங்கள் வழக்கில் 2017 ஜூலை மாதம் 28 ம் திகதியன்று அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியதால் ஏற்பட்ட ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நன்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, மூன்று இஸ்லாமியக் கட்சிகளான TLP, சுன்னி தெஹ்ரீக் மற்றும் கத்தாமே -நபுவத் ஆகியவை பைசலாபாத்தில் ஒரு தர்ணாவை அமைத்தன.
அதில் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டிக்கு இடையிலான சாலை தொடர்புகளைத் தடுக்கும் குறிக்கோளோடு அவை செயற்பட்டன. இந்த தர்ணாவின் உள்நோக்கமாக இருந்து 2017 ல் நடந்த தேர்தலாகும், இது ஒரு வாக்காளர் முகமது நபித்துவத்தின் இறுதித்தன்மையை நம்புகிறாரா இல்லையா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை.இவர்கள் குறிப்பிடும் “தவறு” சரிசெய்யப்பட்ட போதிலும், மூன்று கட்சிகளும் சட்டத்துறை அமைச்சர் சாஹித் ஹமீத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று பிடிவாதமாய் இருந்தன. அவர்கள் இராணுவத்தின் பணிகளைச் செய்வதால், இராணுவம் தர்ணாவை அகற்றாது என்று ரிஸ்வி விடாப்பிடியாய் இருந்தார்.
தர்ணா இஸ்லாமியவாதிகள் எங்கிருந்தோ பணத்தையும் தார்மீக ஆதரவையும் பெறுகிறார்கள் என்பதில் உச்ச நீதிமன்றமும் இஸ்லாமாபாத்தின் உயர் நீதிமன்றங்களும் உறுதியாக இருந்தன; அவை இராணுவத்திடம் இருந்து தான் கிடைக்கின்றனவோ என்ற சந்தேகமும் எழுந்தது. அதேவேளை, தர்ணா தொடர்பான ISI அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ISI அமைப்பானது, தனது அமைப்பாளர்களுக்கு சில மத சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே இருப்பதாகக் கூறி தர்ணாவை நியாயப்படுத்தியது.
இதனால், ஆத்திரமடைந்த நீதிமன்றம் “நிதி கிடைக்கும் மூலங்களையும், தர்ணா அமைப்பாளர்கள் இவற்றோடு எவ்வாறு தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்பது பற்றியும் நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றது. நீதிபதி குவாசி பாய்ஸ் இந்த விஷயத்தில் ISI சற்று கடுமையான போக்கைக் கடைபிடிக்க வேண்டுமென தனது உரையில் கூறியிருந்தார்.
அதே நாளில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஷவுகத் சித்திகி தர்ணாவுக்கு எதிராக இரண்டு குடிமக்கள் அளித்த மனுவில், புலனாய்வு அமைப்புகள் (ISI உட்பட) தர்ணாவின் பின்னால் உள்ளன என்ற எண்ணம் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேநேரம், TLP, கத்தாமே -நபுவத் மற்றும் சுன்னி தெஹ்ரீக் ஆதரவாளர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளைத் துவம்சம் செய்து வாகனங்களைத் தீயிட்டு எரித்தனர்.
இராணுவத்தின் தலையீட்டுடன் ஏற்பாடு செய்யப்பட்ட TLP மற்றும் முஸ்லீம் லீக் (N) அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக 21 நாட்களுக்குப் பிறகு நவம்பர் 25 ஆம் தேதி தர்ணா நிறைவுக்கு வந்தது. நீதிபதி சித்திக், தர்ணாவின் பின்னால் இருந்துகொண்டு, இராணுவம் எவ்வாறு சமாதானம் செய்யும் பாத்திரத்தை வகிக்க முடியும் என்று கூறினார்.
இந்த தர்ணா நாடகத்தில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று: நாட்டில் முஸ்லிம் லீக் (N) கட்சியை அபத்தமானதும் பொருத்தமற்றதும் என்ற நிலைக்கு இட்டுச்சென்று, அதன் ஆட்சியின் கீழிருந்த அரசாங்கத்தை முடக்குவது. இங்கே உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழாம் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. அந்தக் குழாம், பனாமா ஆவணங்கள் வழக்கில் நவாஸ் ஷெரீப்பை விசாரிக்காமல், கூட்டு விசாரணைக் குழுவின் (JIT) அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவரைத் தகுதியற்றவர் என்று கருதி, அரசியலமைப்பின் 62 மற்றும் 63 வது பிரிவுகளுக்கமைய, அவர் ஒரு நல்ல முஸ்லீம் குடிமகன் அல்ல என்று ஏகமானதாகக் கூறியது.
இரண்டாவது பக்கம் தர்ணா தானே ஒரு காரணியாய் இருந்தது. பாகிஸ்தானில் உள்ள அறிவுசார் சமூகங்கள் மத்தியில், இந்த அமைப்பு இராணுவத்தால் நிதியளிக்கப்பட்டு போஷிக்கப் பட்டும், இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் ஆதரவோடும் இஸ்லாமியவாத குழுக்களை உயர்த்தவும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளை இல்லாதொழிக்கவும் துணை நின்றது என்ற எண்ணக்கரு தோன்றியதில் சந்தேகமில்லை. ஜூலை 2018 தேர்தல்களில் மோசடியும், கள்ள வாக்குகள் மூலமும் பிரதமராக ஒரு ‘அரை அரசியல்வாதியை’ மக்கள் மீது திணித்ததன் மூலம் நாட்டின் காத்திரமான நற்பெயருக்கு அதிக பங்கம் ஏற்பட்டது.
அன்று தொடக்கம், பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊழல்களும் மோசடிகளும் தலைவிரித்தாடின. நாடு மீண்டும் திரும்ப முடியாத ஒரு கடினமான நெருக்கடியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இம்ரானின் கட்சி சகாக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். அவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளப் பயப்படுகிறார்கள்.
அவர் 31 க்குள் செல்ல வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சிகள், அவர் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் அவரது முன்னோடிக்காப்பாளர்களான இராணுவத்தை மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் காத்திருக்கின்றன போலும்.
இம்ரானுக்கு ஒரு மாற்றம் என்பது மிகவும் அதிகமாகத் தேவைப்பட்டது. TLP அவருக்கு உதவ முன்வந்தது. அது பிரெஞ்சு நாட்டுத் தூதுவரை வெளியேற்ற போராட்டங்களைத் தொடங்க வேண்டுமென அச்சுறுத்தியது. இது மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று இம்ரான் அரசாங்கம் நவம்பர் மாதம் TLPஇடம் கூறியது. மூன்று மாதங்கள் நிறைவடைந்தபோது, ஏப்ரல் 20 வரை அரசாங்கம் அவகாசம் கேட்டது.
ஆனால், காலக்கெடுவிற்கு பத்து நாட்கள் இருக்கையில், TLP தலைவர் சாத் ரிஸ்வி போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார் என்ற கோரிக்கையின் பேரில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 10 ம் திகதி ரிஸ்வியின் கைது காரணமாக TLP ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அரசாங்கம் மூன்று நாட்கள் வரை இவற்றைக் கண்டும் காணாமல் இருந்தது. இஸ்லாமியவாதிகள் நான்கு பேரைக் கொலை செய்தும், 850 காவல் துறையினரையும் காயப்படுத்தினர்.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவித்தனர். பொதுமக்கள் இவற்றுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த போது, அரசாங்கம் TP ஐ தடை செய்வதாகப் பாசாங்கு காட்டியது. அதேநேரம் TLP யும் மிகவும் பௌவியமாக அதன் ஆதரவாளர்களிடம் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டது.
Average Rating