பசியா மருந்து? (மருத்துவம்)

Read Time:1 Minute, 50 Second

எப்போது கேட்டாலும் பசியே இல்லை என்கிறான் என் மகன். என்னதான் பிரச்னையாக இருக்கும்? இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் விக்ரம்…

‘‘பசியின்மைக்கு பலவித காரணங்கள் இருக்கக்கூடும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகமாகும்போது பசி எடுக்காமல் இருப்பது பலர் சந்திக்கும் பிரச்னை. அசிடிட்டிக்காக மருந்து சாப்பிட்டு அதை குணப்படுத்திக் கொள்ளலாம். பசியின்மை இருக்கும் எல்லோரும் அசிடிட்டி மருந்துகளை கண்மூடித்தனமாக சாப்பிடக்கூடாது.

45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பசியின்மை ஏற்பட்டால் எண்டோஸ்கோப் மூலம் புற்றுநோய் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்ப்போம். புற்றுநோயின் அறிகுறிகளில் பசியின்மை முக்கியமானது. வயிற்றில் கிருமித்தொற்று ஏற்படும்போதும் கூட பசியின்மை ஏற்படலாம். அதனால், கிருமித்தொற்று ஏற்படாத வண்ணம் சுகாதாரமாக நடந்து கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம், மனச்சோர்வு, மஞ்சள் காமாலை, கணையத்தில் ஏற்படும் கோளாறு எனப் பலவற்றாலும் பசியின்மை ஏற்படுகிறது. பசியின்மையை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ உதவியை நாடிச்செல்ல வேண்டும். ஒருவேளை புற்றுநோய் இருந்தாலும் ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளின் பால் பல் பராமரிப்பு!! (மருத்துவம்)
Next post பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…? (அவ்வப்போது கிளாமர்)