CT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்! (கட்டுரை)

Read Time:1 Minute, 42 Second

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. நிறைய பேர் சி.டி. செய்வதே முக்கியம் என்று கருதுகிறார்கள். லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டு தனிமையில் இருப்பதே நல்லது. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…!! (கட்டுரை)
Next post உணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்!! (மகளிர் பக்கம்)