பெண்கள் ஏன் கால் மீது கால் போட்டு உட்கார கூடாது தெரியுமா ? (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 56 Second

இந்த காலக்கட்டத்தில் பெண்கள் பலரிடம் இருக்கும் ஒரு தவறான பழக்கம் என்னவென்றால் கால் மீது கால் போட்டு அமர்வது. இந்த பழக்கமானது பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் பாதிப்பதால் தான், நம் முன்னோர்கள் அன்றே வேறு விதமாக இதை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு அமர்வதால், பெண்களின் இடுப்பின் சமநிலை பாதிப்படையும். அதோடு, தசை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மூட்டு வலி உண்டாகலாம். வெரிகோஸ் வெயின் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் கால்களில் ஏற்பட வாய்ப்பு அதிகம். பெரோன்னியல் நரம்பு பாரலிசிஸ் என்னும் நோய் உண்டாக காரணியாக அமைகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி கால் மேல் கால் போட்டு உட்காருவதால் செரிமானம் சம்பந்தப்பட்ட அஜீரணக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதோடு இதய பாதிப்பு ஏற்பட்டு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். பெண்கள் இந்த நிலையில் அமர்வதால், பிற்காலத்தில் கர்ப்பப்பையில் பிரச்சனைகள் உண்டாகும். பெண்கள் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படக்கூட வாய்ப்புகள் அதிகம். எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாதியர்களின் தாதி..!! ‘சூலகிட்டி நரசம்மா’!! (மகளிர் பக்கம்)
Next post பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% தான்!! (அவ்வப்போது கிளாமர்)