திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செல்வது நல்லதா… !! (கட்டுரை)

Read Time:4 Minute, 0 Second

திருமணத்திற்கு முன்பே டேட்டிங்கா? என்று சிலர் வியப்பாக பார்க்கலாம். டேட்டிங் என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கானதல்ல, ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள, தெரிந்துக் கொள்ள ஒதுக்கப்படும் நேரம் என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். டேட்டிங் என்பதற்கான பொருள் தமிழில் வேறு மாதிரி தான் இருந்து வருகிறது இன்றளவும்.

திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்ள டேட்டிங் என்பது தேவையானது தான். டேட்டிங் என்றவுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமான ரிசார்ட்டுக்கு போக வேண்டும் என்றில்லை கோவிலுக்கு சென்று அருகில் உள்ள இடங்களுக்கு கூட போய் வரலாம்…..

மனம் திறந்த பேசுவதற்கான நேரம்
திருமண பந்தத்தை தொடங்குவதற்கு முன்னரே மனம் திறந்து பேசுவதற்கான ஓர் நேரமாக இது அமைகிறது. இதனால், இல்லறத்தின் ஆரம்ப நாட்களிலேயே நீங்கள் புரிதலோடு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்.

ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளலாம்
இந்த வாய்ப்பு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்ள ஓர் கருவியாக அமைகிறது. உங்கள் குணாதிசயங்கள் என்ன? நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், கையாள வேண்டும் என்று இந்த நேரத்தின் மூலமாக புரிந்துக் கொள்ள முடியும்.

பிடித்தது, பிடிக்காதது
மேலும், இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது. இதில், உங்கள் இருவருக்கும் பிடித்த, பிடிக்காத பொதுவானவை என்னென்ன, உங்களுக்கு பிடித்த, அவருக்கு பிடிக்காமல் இருக்கும் விஷயங்கள் என்னென்ன என்றெல்லாம் தெரிந்துக் கொள்ளலாம்.

எதிர்பார்ப்புகள்
மேலும், ஒருவரிடம் மற்றொருவர் உறவு ரீதியாக என்ன எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார், நீங்கள் அவருக்க எப்படிப்பட்ட துணையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துக் கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

சுவாரஸ்யங்கள்
நீங்கள் முதன் முதலில் அவருடன் வெளியில் சென்று வரும் போது அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். உங்கள் வாழ்நாளின் கடைசி வரை இது உங்கள் மனதைவிட்டு மறையாத ஒன்றாய் இருக்கும்.

நினைவுகள் பகிர்ந்துக் கொள்ளுதல்
உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பற்றி நீங்கள் பகிர்ந்துக் கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

குடும்ப வரலாறு
திருமணத்திற்கு பிறகு வந்து ஒவ்வொருவர் பற்றி கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்துக் கொல்வதற்கு பதிலாக, திருமணமான மறுநாளே உங்கள் துணையின் குடும்பத்தை பற்றி மொத்தமாக தெரிந்துக் கொள்ள, அவர்களது குடும்பத்தை பற்றிய புரிதல் ஏற்பட இதுவொரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 இல் திருமணம் – கிடைக்கும் நன்மைகள்! (கட்டுரை)
Next post குழந்தையும் தேனும் !! (மருத்துவம்)