சிறுநீரக கற்களை கரைக்கும் ரண கள்ளி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 23 Second

புண்களை ஆற்றக் கூடியதும், சிறுநீரக கற்களை கரைக்க வல்லதும், வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியதும், மருக்கள், காலாணிகளை குணமாக்கும் தன்மையும் கொண்டது ரண கள்ளி. அழகுக்காக வளர்க்க கூடியது ரண கள்ளி. இது கிருமி நாசினியாக விளங்குகிறது. கொசுக்களை விரட்ட கூடிய தன்மை உடையது. ரண கள்ளியை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது. மேல்பூச்சு மருந்தாக போடும்போது விஷக்கடிக்கு மருந்தாகிறது.

வலி நிவாரணியாக விளங்கும் ரண கள்ளி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. காலரா, சீதபேதியை தணிக்க கூடியது. சிறுநீரக கற்களை உடைக்க கூடியது. சிறுநீர் சரியாக போகாமல் அடி வயிற்றில் வீக்கம் இருந்தால் மேல்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வீக்கம் சரியாகும். ரண கள்ளி இலையை பயன்படுத்தி சிறுநீரக கற்களுக்கான உள்மருந்து தயாரிக்கலாம். 3 அல்லது 4 இலைகள், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

சிறுநீர் எரிச்சலை போக்க கூடியது. சிறுநீர் தாரையில் ஏற்படும் அழற்சி சரியாகும். உயர் ரத்த அழுத்தம் சீராகும்.இலைகளை பயன்படுத்தி சிறுநீர் கற்களால் ஏற்படும் வலியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் இலைகளை லேசாக வதக்க வேண்டும். வதக்கிய இலையில் உப்பு தடவி அடிவயிற்றில் பற்றாக போடவும். இவ்வாறு செய்தால் வலி சரியாகும். இலைகளை பயன்படுத்தி வயிற்றுப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: இலைசாறு, புளிப்பில்லாத மோர், உப்பு. இலைகளை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இலைகளை பிழிந்து சாறு எடுக்கவும். 10 முதல் 20 மி.லி சாறு, அரை டம்ளர் மோருடன் சிறிது உப்பு கலந்து காலை, மாலையில் எடுத்துக்கொள்ளலாம். இதனால் வயிற்றுபோக்கு, ரத்த கழிச்சல் குணமாகும். ரத்த மூலம், தடைப்பட்ட மாதவிடாய் சரியாகும். வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது.

புற்றுக்களை உண்டாகும் நச்சுகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது ரண கள்ளி. புண்களை ஆற்ற கூடியது. கள்ளி வகையை சேர்ந்த இது நோய் கிருமிகளை அழிக்கவல்லது. ரத்த கசிவை கட்டுப்படுத்தும். அதிக மாதவிலக்கை சீராக்கும். சிறுநீரை சீராக வெளியேற்றும். இலைகளை பயன்படுத்தி மருக்கள், கால் ஆணிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ரண கள்ளி இலைகளை நசுக்கி பசையாக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்துவதால் கால் ஆணிகள் குணமாகும். மருக்கள் கரைந்து போகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ரண கள்ளி, காயங்களை ஆற்றக் கூடியது. நாள்பட்ட, அழுகிய மற்றும் சீல் வைத்த புண்களை சீக்கிரம் ஆற்ற கூடியது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இதய சிகிச்சை அரங்கம்!! (மருத்துவம்)