அப்பளம் இன்றி விருந்து சிறக்காது!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 14 Second

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும், சுவை கொஞ்சம் குறைவாக உணர்ந்து சாப்பிட முடியாமல் தவிக்கும் பெரியவர்களுக்கும் அப்பளம் பொறிக்கும் சத்தம், அதனோடு இணைந்து அதை சாப்பிடும் போது வரும் கரக் முரக் சத்தம் பசியை தூண்டும் மாயாஜாலம். அப்பளம் வெறும் சுவைக்கானதாக மட்டுமின்றி அதில் சேர்க்கப்படும் சீரகம் குழந்தைகளுக்கு ஜீரண சக்தியைக் கொடுக்கிறது.

இதில் புரோட்டினும் உள்ளது. மிகவும் பாரம்பரியமிக்க நமது கலாச்சாரத்தின் உன்னதமான உணவு வகைகளில் அப்பளம் இன்றியமையாதது. தடால்புடலான கல்யாண வீடாக இருந்தாலும் சிறியதொரு வீட்டு அறுசுவை விருந்தாயினும் அப்பளம் இல்லாமல் சிறக்காது. அதிலும் ‘மான்மார்க்’ அப்பளம் தனக்கென்று தனி அடயாளத்தை கொண்டிருக்கிறது.

‘‘1975 ஆம் ஆண்டு அப்பா பாலகிருஷ்ணன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்றும் அவரது மேற்பார்வையில் நானும் என் சகோதரரும் இந்த அப்பள தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறோம்” என்கிறார் பாபு. தங்களது அப்பளத்தின் சிறப்பை கூறுகையில், “பிளைன் அப்பளம், மசாலா அப்பளம் என இரண்டு வகை கொடுக்கிறோம். மசாலா அப்பளம் சீரகம், மிளகுக் தூள் சேர்த்து இரண்டு வகைகளில் வருகிறது.

இதனால் மருத்துவக் குணமிக்க சீரகத்தையோ, மிளகையோ தனியாக சாப்பிட விரும்பாதவர்களும் அப்பளத்தோடு சேர்க்கையில் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள். வழக்கமான வடிவமான வட்ட வடிவத்தில் கொடுப்பதோடு, நீட்ட வடிவில் கொடுப்பதால் சிப்ஸ் போல் ஸ்நாக்ஸாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்” என்கிறார்.

இந்தியா முழுவதும் வியாபாரம் மேற்கொள்ளும் மான்மார்க் அப்பளம், சிங்கப்பூர் நாட்டின் லீடிங் பிராண்டாக இருக்கிறது.“இந்தியா முழுதும் செய்தாலும், சென்னை, தமிழ்நாடு மட்டும் அதிகம் விற்பனையாகிறது. எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் இன்றி சுவை, தரத்திற்கு மட்டுமே முழு கவனம் கொடுக்கிறோம். பாரம்பரியத்தோடு கொடுப்பதினால் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்தவர்களாகவும் இருக்கிறோம்.

கடைகளிலும், வாடிக்கையாளர்களிடம் இருந்தும் கிடைக்கும் ஃபீட்பேக் கொண்டு அவர்களது எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை பார்த்து அதற்கேற்ற மாதிரி ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வருகிறோம்” என்று கூறும் பாபு, அப்பள தொழிலில் இப்போது சந்தித்து வரும் சவால்கள் பற்றி பேசினார்.

‘‘அப்பள தொழிலில் மட்டுமல்ல எல்லா தொழில்களிலும் மிஷினரிஸ், கம்ப்யூட்டரைஸ் ஆனதால் மேன்பவர் சிக்கலாக இருக்கிறது. எங்கள் தொழிலில் மேன்பவர்தான் முக்கியமான ஒன்று. ஆனால் வரும் காலங்களில் இதற்கு ஆட்கள் கிடைப்பது சிரமம் என்பதை இப்போதே உணரத் தொடங்கி இருக்கிறோம். அதற்கான தீர்வு காண்பதற்கு தொழில்நுட்பத்தில் எவ்வாறு மாறுதல் செய்யலாம், அதற்கேற்ற இயந்திரங்கள் குறித்த ஆய்வுகளில் இறங்கி இருக்கிறோம்” என்றார் பாபு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளித்தெரியா வேர்கள் !! (மகளிர் பக்கம்)
Next post டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)