ஜப்பானில் நில நடுக்கம்

Read Time:1 Minute, 32 Second

Japan.map.jpgஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது.ஆனால் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில நடுக்கம் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. அடிக்கடி இந்த நாட்டில் நில நடுக்கம் ஏற்படுவதால் அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க முன் எச்சரிக்கை நடவடிகக்கைகலை அந்நாட்டு அரசு செய்துள்ளது.

என்றபோதிலும் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே கடலுக்கடியில் அதிக சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி வந்து விடுமோ என்று அஞ்சிய டோக்கியோ மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளுக்கு வந்தனர்.

இந்த நில நடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவையில் 5 ஆக பதிவாகியிருந்தது. இதனால் சுனாமி ஏறப்டாது என்று அந்நாட்டு அரசு அறிவித்த பிறகே மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு சென்றனர். இந்த நில நடுக்த்தால் எந்த உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Next post தமிழர் பகுதியில் ஒரே கிராமத்தின் மீது 48 குண்டுகளை வீசியது ராணுவம்