மெடிக்கல் ஷாப்பிங்!! (மருத்துவம்)
எடை பராமரிப்புக்கு BMI Scale… முதியவர்களுக்கு Diaper… கழுத்துவலிக்கு Cervical pillow…
நவீன மருத்துவத்தில் பல மருத்துவ உபகரணங்களின் தேவை இன்று தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. தனிநபராக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் இரண்டு தரப்புமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இதில் தற்காலிக மருத்துவ உபகரணங்கள், நீண்ட காலமாகப் பயன் தரும் நாள்பட்ட நோயாளிகளுக்கான உபகரணங்கள், மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையங்களிடம் இருக்க வேண்டிய பல உபகரணங்கள் பற்றி நாம் திரட்டிய தகவல்களை இங்கே பகிர்கிறோம். இவற்றில் சாதாரணமாக ரூ.85 முதல் ரூ.65,000 வரை மதிப்பிலான கருவிகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. முறையான மருத்துவ ஆலோசனையுடன் இவற்றைப் பயன்படுத்தும்போது முழுமையான பலன் கிடைக்கும் என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.
wet wipes:
உடல்நிலை சரியில்லாதவர்களை தினசரி குளிக்க வைக்க முடியாது. ஆனாலும், சுத்தத்தைப் பராமரிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் நோயாளியின் உடலில் தண்ணீரால் நனைக்கப்பட்ட துணியினைப் பயன்படுத்துவார்கள். Wet wipes இதற்கு சரியான தீர்வாக இருக்கும். எல்லா உடல் உறுப்புகளையும் துடைத்து சுத்தப்படுத்துகிற ஆன்டிசெப்டிக் பொருளாக பயன்படுகிறது Wet wipes. இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு நல்ல நறுமணத்தையும் கொடுக்கிறது. இதன் விலை தோராயமாக ரூ.85.
BMI Scale:
இன்று உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக மாறிவிட்டது. எடையை குறைப்பதும் சவாலானதாகிவிட்டது. எனவே, ஃபிட்டான உடலமைப்பை விரும்புகிறவர்கள் அடிக்கடி தங்கள் எடையைக் கண்காணிக்க விரும்புகிறார்கள். அதற்கு உதவும் கருவிதான் BMI Scale. நமது உயரத்திற்கு ஏற்ற சரியான எடையுடன் இருக்கிறோமா என்பதையும், உடல் எடை குறைவாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்பதை அறிவதற்கும் BMI Scale உதவுகிறது. இதன் விலை தோராயமாக ரூ.2,100.
Under Pad:
நீண்ட நாட்கள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவுகிறது Underpad. நாள்பட்ட நோயாளிகளாக படுத்த படுக்கையாகி இருக்கும் சிலருக்கு உடலில் கட்டிகள் உண்டாகி புண்கள் ஏற்படும். இதுபோன்ற புண்கள் ஏற்படாமல் தடுக்கிறது Underpad. இந்த Underpad-ஐ கீழே விரித்து நேரடியாக சிறுநீர் கழிக்கவும் பயன்படுத்தலாம். இதன் விலை தோராயமாக ரூ.220.
Adult diapers:
டயாப்பர் என்றவுடன் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் டயாப்பர்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், முதியவர்களுக்கான டயாப்பரும் இப்போது கிடைக்கிறது. பெரியவர்களின் சிறுநீர் மற்றும் மலம் போன்றவற்றை உறிஞ்சிக்கொள்வதற்கு இந்த Adult diapers பயன்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு இது அதிகம் பயனுள்ளதாக இருக்கிறது. காலை முதல் மாலை வரை ஒரே டயாப்பரை பயன்படுத்திவிட்டு, அதை எடுத்தபிறகு ஒரு Underpad-ஐ பயன்படுத்தலாம். படுக்கையிலேயே கழிவுகளை வெளியேற்றிய பிறகு, குறிப்பிட்ட நேரம் கழித்து அதை அகற்றி நோயாளியின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு இந்த டயாப்பர் உதவுகிறது. இதன் விலை தோராயமாக ரூ.250
Oxigen Concentrators:
சுவாசிப்பதில் சிரமம் உள்ள, உடல்நிலை மிகவும் முடியாத முதியவர்களுக்கு வீட்டில் வைத்து செயற்கை சுவாசம் அளிக்க இக்கருவி பயன்படுகிறது. இதில் காற்றின் வேகத்தை 1 முதல் 5 வரை நோயாளிக்கு தேவைப்படும் அளவில் வைத்து பயன்படுத்தலாம். இக்கருவி சுற்றுப்புறத்திலுள்ள ஆக்சிஜனை எடுத்து, சுத்திகரித்து நோயாளிக்கு கொடுக்கிறது. இந்த இயந்திரம் மின்சார உதவியோடு செயல்படக்கூடியது. இதைத் தொடர்ந்து 16 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதன்பிறகு இக்கருவிக்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஓய்வு கொடுத்துவிட்டு மறுபடியும் அதை பயன்படுத்தலாம். மின்சாரம் இல்லாதபோது இக்கருவியோடு Oxygen cylinder-ஐ இணைத்து பயன்படுத்தலாம். வெளியிடங்களுக்கு பயணம் செய்கிறபோது இந்த சிலிண்டர்களை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். இதை 5 முதல் 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இந்த சிலிண்டர்களில் ஆக்சிஜனை மறுபடியும் நிரப்பி பயன்படுத்திக் கொள்ளலாம். விலை தோராயமாக ரூ.11,000.
Cervical pillow:
உறங்கும்போது தலையணையை சரியாக பயன்படுத்தாததால் ஏற்படுகிற கழுத்துவலி, முதுகுத்தண்டுவலி, எலும்பு தேய்மானம், தூக்கமின்மை போன்ற பிரச்னை உடையவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்த Cervical pillow மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விலை தோராயமாக ரூ.1,500.
Back support:
இன்று வாழ்க்கை முறை Sedentary life style -ஆக மாறிவிட்டதால் கழுத்துவலி, முதுகுத்தண்டுவலி பிரச்னையால் பலரும் அவதிப்படுகிறார்கள். இத்தகைய பிரச்னை உடையவர்களுக்கு Back support மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது சரியான நிலையில் உட்கார்வதற்கு உதவுகிறது. இதில் Sleep back pillow, Back-roll, Travel-plus, Sit-plus போன்ற வகைகள் உள்ளது. விலை தோராயமாக ரூ.1,500
Motorized wheel chair:
அலுவலகம், பள்ளிக்கூடம், கல்லூரி, வெளியிடங்கள் அல்லது வீட்டிற்குள்ளேயும் இந்த Motorized wheel chair-ஐப் பயன்படுத்தலாம். இந்த நாற்காலியில் உள்ள Joystick மூலம் மற்றவர் உதவியின்றி தாமாகவே முன்னர், பின்னர் என்று இயக்கி பயணிக்கலாம். இக்கருவியிலுள்ள
பேட்டரியை 8 மணி நேரம் சார்ஜ் செய்து 8 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இக்கருவியை முதியவர்களும், நடக்க
இயலாதவர்களும் பயன்படுத்தலாம். விலை தோராயமாக ரூ.65,000.
CPAP Machine:
Sleep apnea என்கிற தூக்கப் பிரச்னை உடையவர்களுக்கு ஏற்படுகிற சுவாசப் பிரச்னையை சரி செய்வதற்கு இந்த CPAP Machine பயன்படுகிறது. இதை மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். இதன் மூலம் தூக்கப் பிரச்னையை சரி செய்து முகப்பொலிவு பெறலாம் என்கிறார்கள். விலை தோராயமாக ரூ.31,000.
BIpap Machine
CPAP Machine-ஐப் போன்று சுவாசப் பிரச்னையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது இந்த BIPAP Machine. இக்கருவி நமது நுரையீரலின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இயல்பாகவே நுரையீரல் குழாய்களில் சுருக்கம் ஏற்படும். இந்த சுருக்கத்தைப் போக்கி அக்குழாய்களை விரிவடையச் செய்வதற்கு இக்கருவி பயன்படுகிறது. இதன் மூலம் அவரவர் வயது மற்றும் உடல்நிலைகளுக்கு ஏற்றவாறு தேவையான அளவு அழுத்தத்தை மருத்துவர் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும். விலை தோராயமாக ரூ.45,000
Average Rating