சூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 3 Second

உள்ளத்தைப் பிரதிபலிக்கிற உதடுகளுக்கு அழகு சேர்க்கும் அடிப்படை விஷயங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். எந்த மாதிரியான லிப்ஸ்டிக் ஷேடுகள் யாருக்குப் பொருந்தும் என்றும், லிப் மேக்கப் பற்றியும் தெரிந்து கொண்டோம். உதடுகளை அழகுப்படுத்துவதில் லிப்ஸ்டிக் தவிர வேறென்ன அழகு சாதனங்கள் இருக்கின்றன… அவற்றை எப்படித் தேர்வு செய்வது? இந்த இதழிலும் தொடர்கிறார் மேக்ஓவர் பிரான்ஸரின் உரிமையாளரும், அழகுக்கலை நிபுணருமான விஜி கே.என்.ஆர்.

உதட்டழகுக்கு என்னவெல்லாம் தேவை?

லிப் பாம்

உதடுகளுக்கு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படக்கூடியது இந்த லிப் பாம். மெழுகு போன்ற தன்மையுள்ள இதை உதடுகளின் மேல் தடவிக் கொள்வதன் மூலம் உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கலாம். வறண்ட காற்று, அதிகக் குளிர்ச்சியான வானிலை போன்றவற்றின் காரணமாக உதடுகள் வெடித்திருந்தாலும், இதன் மூலம் சரி செய்யலாம். உதடுகள் வறண்டு, வெடித்து, ரத்தம் வருவதும் தடுக்கப்படும்.இப்போதெல்லாம் லிப் பாம்கள் கலர்கள் சேர்க்கப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கிற போது லிப்ஸ்டிக் போட்ட மாதிரியும் இருக்கும்.

உதடுகளின் இயற்கையான நிறங்களில்கூட லிப் பாம்கள் கிடைக்கின்றன. லிப் பாம்கள் லிப்ஸ்டிக் தடவுவதைப் போல அப்படியே நேரடியாக உபயோகிக்கிற முறையிலும் கிடைக்கின்றன. ஆயின்மென்ட் போல டியூபிலும் வருகின்றன. அவற்றை லேசாகப் பிதுக்கி எடுத்து, விரல்களால் தொட்டும் உபயோகிக்கலாம். குறிப்பாக குளிர் நாட்களில் பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் இது உதவியாக இருக்கும்.லிப் பாம்கள் பொதுவாக பீஸ்வாக்ஸ், Camphor, பாரபின் மற்றும் பெட்ரோலாட்டம் ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன. சிலவகை லிப் பாம்களில் வாசனை, கலருக்காக டை, சுவை, சன்ஸ்கிரீன் போன்றவையும் சேர்க்கப்படுவதுண்டு.

லிப் க்ளாஸ்

உதடுகளுக்கு பளபளப்பான ஒரு தோற்றத்தைக் கொடுப்பதே இதன் வேலை. கூடவே மெலிதான ஒரு நிறத்தையும் தரும். லிப் க்ளாஸ் என்பது பெரும்பாலும் திரவ வடிவிலேயே இருக்கும். இது லிப்ஸ்டிக்கை விட குறைந்த நேரம்தான் தாக்குப் பிடிக்கும். இதுவும் வேறு வேறு ஷேடுகளில் பளபளப்புக்கு ஏற்றபடி கிடைக்கிறது.லிப் க்ளாஸ் பல வடிவங்களில் கிடைக்கிறது. பொதுவாக சின்ன உருளை வடிவில், ரோல் ஆன் மாடலில் வரும். குட்டி பிரஷ்ஷின் உதவியுடன் தடவிக் கொள்கிற மாதிரியும் கிடைக்கிறது. டியூபிலிருந்து அழுத்தி எடுத்து விரலால் தொட்டுத் தடவிக் கொள்கிற படியும் கிடைக்கிறது.

லிப் க்ளாஸில் இப்போது லேட்டஸ்ட் ’ப்ளம்ப்பிங்’ வகை. இதில் உதடுகளை பெரிதாகவும் மிருதுவாகவும் காட்டக்கூடிய பொருட்கள் கலக்கப்பட்டிருக்கும். உதடுகளை கவர்ச்சியாகவும் பெரிதாகவும் காட்ட உபயோகிக்கப்படுகிற கொழுப்பு இன்ஜெக்‌ஷன்களோடு ஒப்பிடும் போது இந்த ப்ளம்ப்பிங் லிப் க்ளாஸ் மிகவும் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் அற்றது. ஆனாலும், இது தரும் தோற்றம் தற்காலிகமானது.உதடுகளை சற்று நிறமாகக் காட்ட வேண்டும். அதே நேரம் லிப்ஸ்டிக் போட்ட தோற்றமும் கூடாது என்பவர்கள், லிப் க்ளாஸ் உபயோகிக்கலாம்.

ஷியர் லிப்ஸ்டிக்

ஒருமுறை இந்த லிப்ஸ்டிக்கை தடவிக் கொண்டால், பிறகு அடிக்கடி டச்சப் செய்யவோ, துடைத்துவிட்டு மறுபடி அப்ளை செய்யவோ தேவையிருக்காது. இன்னும் சொல்லப் போனால் உதடுகளைப் பற்றியே மறந்து விடலாம். இவற்றிலுள்ள அதிகப்படியான ஈரப்பதமானது பல மணி நேரத்துக்கு உதடுகளை வறண்டு போகாமல் மென்மையாகவும், இயற்கையான நிறத்துடனும் வைக்கும். அது மட்டுமின்றி, சாதாரண லிப்ஸ்டிக் உபயோகிக்கும் போது, நேரமாக ஆக, அது கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து, கடைசியில் கோடுகளாக திட்டுத்திட்டாகக் காட்சியளிக்கும். ஷியர் லிப்ஸ்டிக்கில் அந்தப் பிரச்னையும் இருக்காது.

செமி மேட் லிப்ஸ்டிக்

ஷியர் லிப்ஸ்டிக்கை விடவும் சிறந்த தோற்றத்தைத் தரக்கூடியது. மேட் ஃபினிஷில் இருப்பதால் இயற்கையாகவும் தெரியும்.

க்ரீம் லிப்ஸ்டிக்

மேட் ஃபினிஷ் வேண்டாம் என்பவர்களுக்கானது. அடர்த்தியான கலர் பிக்மென்ட்டுகள் இருப்பதால் உதடுகளுக்கு அழகிய வடிவத்தைக் கொடுக்கும். லிப் லைனர் உபயோகித்த பிறகு இந்த க்ரீம் லிப்ஸ்டிக்கை பிரஷ் தொட்டு நிரப்ப வேண்டும்.

லிப் சாட்டின்

உதடுகளுக்கான அழகுப் பொருட்களில் ரொம்பவே லேட்டஸ்ட். திரவ வடிவில் மார்க்கர் மாதிரி இருப்பவை. இதிலுள்ள ஆல்கஹால் காரணமாக மற்ற உதட்டழகுப் பொருட்களைவிட, வேகமாக உலர்ந்துவிடக்கூடியது. நீண்ட நேரத்துக்கு உதடுகளை அழகாக வைக்கும். ஆனால், அளவுக்கு அதிகமாக வறண்டு போகவும் செய்யும்.

லிப் லைனர்

உதட்டலங்காரத்துக்கு இது மிகவும் அடிப்படை. லிப் லைனரின் உதவியுடன், உதடுகளின் வடிவத்தை விரும்பியபடி மாற்ற முடியும். லிப் லைனர் பயன்படுத்திய பிறகு லிப்ஸ்டிக் தடவும் போது, உதடுகளுக்கு முழுமையான ஒரு வடிவமும் கிடைக்கும். லிப் லைனரை தேர்ந்தெடுக்கும் போது, அது லிப்ஸ்டிக்கின் ஷேடிலேயே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதட்டலங்காரம் ஏன் அவசியம்?

லிப்ஸ்டிக் போட்ட உடனேயே உங்கள் முகத்துக்கு ஓர் இன்ஸ்டன்ட் பொலிவு கூடுவதை உணர்வீர்கள். கூட்டத்தில் உங்களைத் தனித்துக் காட்டி, மற்றவரது கவனத்தை உங்கள் பக்கம் திரும்பச் செய்யும் லிப்ஸ்டிக்.

தரமான பிராண்ட் லிப்ஸ்டிக் உபயோகிக்கும் போது அது உங்கள் உதட்டின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். அதுவே உதடுகளுக்குப் பாதுகாப்பாக அமையும்.

சூரியனின் தாக்குதல் வெறும் முகத்தை மட்டும்தான் பாதிக்கும் என நினைத்துக் கொண்டிருப்போருக்கு ஒரு செய்தி. சூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும். எனவே, தனது கதிர்வீச்சின் பாதிப்பை அங்கேயும் காட்டும். இதைக் கருத்தில் கொண்டே இப்போதெல்லாம் பல நிறுவனங்களும் சன் ஸ்கிரீன் கலந்த லிப்ஸ்டிக்குகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. அவை சூரியனின் பாதிப்பில் இருந்து மட்டுமில்லாமல், வறண்ட காற்று, அதீத குளிர் போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்தும் உங்கள்
உதடுகளைப் பாதுகாக்கும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

அழகு சாதன விஷயத்தில் எப்போதுமே அலட்சியம் கூடாது. மலிவாகக் கிடைப்பதால் தரமற்ற பொருட்களைத் தேர்வு செய்யக்கூடாது. உதட்டலங்காரப் பொருட்களுக்கு இது மிக மிக அவசியம்.

தரமற்ற சில லிப்ஸ்டிக்குகளில் குரோமியம், கேட்மியம், மக்னீசியம் போன்ற உலோகக் கலப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை கலந்த லிப்ஸ்டிக்குகளை தொடர்ந்து உபயோகிப்பது உடலின் உள் உறுப்புகளைப் பாதிக்கலாம்.

பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் ’லெட்’ எனும் காரீயக் கலப்பு இருப்பதால், அவற்றை உபயோகிப்பது நரம்பு மண்டலம் மற்றும் மூளையை பாதிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சன் ஸ்க்ரீன் அவசியமா? (மகளிர் பக்கம்)
Next post திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)