டிரம்பினை பதவியிலிருந்து நீக்க முடியுமா ? அரசியலில் இருந்து முற்றாக தடை செய்ய முடியுமா? (கட்டுரை)

Read Time:5 Minute, 1 Second

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
அமெரிக்க செனெட்டில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொள்கின்றார்

அரசியல் குற்றப்பிரேரணை என்றால் என்ன?

விசாரணைகளை நடத்துவதற்கதாக அமெரிக்க காங்கிரசில் குற்;றச்சாட்டுகளை கொண்டுவருவதே அரசியல் குற்றப்பிரேரணை என அழைக்கப்படுகின்றது.

இது குற்றவியல் நடவடிக்கையில்லை அரசியல் நடவடிக்கை என்பதுமுக்கியமானது.
தேசத்துரோகம்,இலஞ்சஊழல் அல்லது வேறு ஏதாவது பாரிய குற்றச்செயல்கள் தவறான செயல்களிற்காக அரசியல் குற்றச்சாட்டு மற்றும் தண்டனைகளின் அடிப்படையில் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யலாம் என அமெரிக்க அரசமைப்பு தெரிவிக்கின்றது.

புதன்கிழமை வாக்கெடுப்பு இடம்பெற்றது இதில் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து குடியரசுக்கட்சியின் பத்து உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

டிரம்பிற்கு எதிராக ஏற்கனவே ஒரு முறை அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனது தேர்தல் வெற்றிக்காக உக்ரைனின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல்குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார்.

தற்போது சனப்பிரதிநிதிகள் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது செனெட்டிற்கு செல்கின்றது. ஜனாதிபதி குற்றவாளி என தீர்ப்பளித்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு செனட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம்.

ஜனநாயக கட்சியினருக்கு இந்த பலம் உள்ளதா என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது.
செனெட் டிரம்பிற்கு எதிராக வாக்களித்தால் அவர் மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு வாக்கெடுப்பை நடத்தக்கூடும்.

2024இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக டிரம்ப் ஏற்கனவே கருத்து வெளியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு வாக்கெடுப்பை நடத்தி அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினால் டிரம்பிற்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பு அதுவாகயிருக்கும்.
டிரம்பிற்கு எதிராக செனெட் வாக்களித்தால் அவர் அமெரிக்காவில் கௌரவப்பதவியை வகிப்பதையும் நம்பிக்கை நிதியம் இலாபம் மீட்டும் அமைப்பின் தலைவராக பதவி வகிப்பதையும் தடைசெய்வதற்கு செனெட்டின் சாதாரண பெரும்பான்மை போதுமானதாகயிருக்கும்.

எனினும் இவற்றில் எதுவும் டிரம்பின் எஞ்சியிருக்கின்ற பதவிக்காலத்தில் நடைபெறப்போவதில்லை
பைடன் பதவியேற்பதற்கு முன்னர் நியாயமான தீவிரமான விசாரணைகளிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள குடியரசுக்கட்சியின் செனெட் தலைவர் மிட் மக்கொனல் அதிகாரத்தை சுமூகமாக பைடனிடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்துவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?! (மருத்துவம்)
Next post குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்)