சருமத்தை காக்கும் கிளிசரின் !! (மருத்துவம்)

Read Time:2 Minute, 16 Second

*இந்த மழை, குளிர்காலத்தில் நம் சருமம் எளிதில் வறட்சியாகி தோல் வெள்ளையாக காணப்படும். இதை தவிர்க்க அடிக்கடி ஜூஸ், சூப், தண்ணீர் வகைகளை அருந்திவர தோல் மென்மையாக இருக்கும்.

*குளித்த பிறகு உடலில் தேங்காய் எண்ணெயைத் தடவி வர, தோல் பளபளப்புடன் சுருக்கம், வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

*முகத்தில் ஏற்படும் பருவைக் கட்டுப்படுத்த, முகத்தை எண்ணெய் பசையில்லாமல் கழுவுவதுடன் எண்ணெய் பொருட்கள், வறுத்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கிளிசரின் தன்மை கொண்ட சோப்பு உபயோகிக்கலாம்.

*மேக்கப் ஹெவியாக போடுவதை தவிர்க்க வேண்டும்.

*நாம் அன்றாடம் பயன்படுத்தும் டால்கம் பவுடரே சிறந்த சன்-ஸ்கிரீனாக காக்கும். தனியாக சன்-ஸ்கிரீன் க்ரீம்-ஐ உபயோகித்தால் நீண்ட நேரம் உடலில், முகத்தில் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

*தினம் தலைக்கு ஷாம்பூ உபயோகித்து தலைக்கு குளித்துவர, பொடுகு பிரச்னை வராது.

*சீயக்காய்த்தூள் மற்றும் சோப்பை தலைக்கு போடுவதை தவிர்க்க வேண்டும்.

*கண்களில் கருவளையம் வராமல் பாதுகாக்க, கண்களுக்கு ஓய்வும், போஷாக்கும் தேவை.

*தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தமே கருவளையத்திற்கு காரணம். நல்ல உணவும், தூக்கமும் மேற்கண்ட பிரச்னையைத் தீர்க்கும்.

*மழை, பனி சீசனில் பெடிக்யூர், மெனிக்யூர் செய்தால் நகத்தின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு நகச்சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. அதை இந்த காலத்தில் அடிக்கடி செய்வதை தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடிப்போ புற்றுநோயே!! (மருத்துவம்)
Next post 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்!! (அவ்வப்போது கிளாமர்)