சருமத்தை அழகுபடுத்த அரிசி கழுவிய தண்ணீர்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 5 Second

அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம். சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு குழந்தைகளுக்கு சுட வைத்த தண்ணீரை கொண்டு கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம்
கிடைக்கும்.

இதனால் சீக்கிரமாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும். அவை இன்றும் கிராம புறங்களில் பின்பற்றுகிறார்கள். அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்த நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும். இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.

ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் சொன்னபடி கேளு… மக்கர் பண்ணாதே!! (மகளிர் பக்கம்)
Next post டிரம்பின் ரகசிய ஒலிப்பதிவு வெளியானதால் அதிர்ச்சி !! (உலக செய்தி)