முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:6 Minute, 36 Second

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா..

சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத் துணியாததை செய்யத் துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை உண்மை போலவே செய்து ஆண்களுக்கு டகாய்ச்சி காட்டுவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

ஆண்களுக்கு செக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்றால் பல பெண்களுக்கு சாக்லேட்தான் ரொம்ப இஷ்டமாம். வயதை மறைப்பதில், மனசுக்குள் இருப்பதை கடைசி வரை மனசோடு வைத்திருப்பது என பல விஷயங்களில் ஆண்களை பீட் செய்து விடுகிறார்களாம் பெண்கள்.

ஆண்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை, ஏன் யோசிக்கத் தயங்கும் விஷயத்தைக் கூட சட்டென்று முடித்து விடுவதில் கில்லாடிகளாம் பெண்கள்.

பெண்கள் குறித்த சில வினோதமான விஷயங்கள்…

கைப்பை இல்லாமல் பெண்களை வெளியில் யாருமே பார்க்கவே முடியாது. கைப்பையும், பர்ஸும் பெண்களுடன் ஒட்டிப் பிறந்தவை. வீட்டைவிட்டு இறங்கி அடுத்த தெருவுக்குப் போனால் கூட இதில் ஏதாவது ஒன்று கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும். கையில் எதுவும் இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்குமாம். ஆனால் கைப்பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை அறிவது மட்டும் ரொம்பக் கஷ்டமான காரியம்.

அதேபோல ஜவுளிக்கடைக்குப் போனால் பெண்களைத் திருப்திப்படுத்துவது ரொம்பக் கஷ்டம். எத்தனை துணிகளைப் பார்த்தாலும் அவர்களுக்குத் திருப்தியே வராதாம். கடைசியில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்வார்கள்தான்… ஆனால் பில்லுக்குப் பணம் கட்டும் நொடியில் கூட, இதை விட பெஸ்ட்டா இருந்திருக்கலாம் என்று எண்ணுவார்களாம்.

பெரும்பாலான பெண்கள் தினசரி குளித்து அழகாக, கமகமவென்று காட்சி தருபவர்கள் என்றாலும் கூட பல பெண்கள் தினசரி குளிக்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்களாம். இருந்தாலும் எப்படி வாசனையாக திகழ்வது என்ற ரகசியம் அவர்களது கை நுனியில் இருக்குமாம்.

ஆண்களுக்கு முன்பு குறைவாக சாப்பிடுவது போல பெரும்பாலான பெண்கள் நடிக்கிறார்களாம். ஆனால் தனியாக சாப்பிடும்போது நிறையவே சாப்பிடுவார்களாம். ஆண்களை விட பெண்கள்தான் ரசித்து, ருசித்து சாப்பிடுகிறார்களாம்.

செக்ஸின்போது அதை பூரணமாக அனுபவிப்பது பெண்கள் மட்டுமே. முன்விளையாட்டு தொடங்கி, உறவு முடிந்து களைத்து விழும் வரையிலும் பெண்கள் ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசிப்பார்களாம். அதேபோல உறவு முடிந்த பின்னரும் கூட அரவணைப்பு தொடர வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம். குறிப்பாக முத்த மழை பொழிந்தால் உள்ளூரக் குளிர்ந்து போகிறார்களாம்.

பெண்களுக்கு பிடித்த விஷயம் முத்தம். எத்தனை முத்தம் கொடுத்தாலும் அவர்களுக்குத் திகட்டுவதில்லையாம். நாள் முழுக்க மனசுக்குப் பிடித்தமானவர் முத்தம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுமாம் பெண்களுக்கு. குறிப்பாக இதழ்களில் தரப்படும் முத்தத்தை பெண்கள் அதிகம் ரசிப்பார்களாம், விரும்புகிறார்களாம்.

மேக்கப், தோற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட பெண்கள், செக்ஸ் உறவின்போதும் கூட தங்களது தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களாம்.. இதெப்படி இருக்கு.

70 சதவீத பெண்களுக்கு சாக்லேட் என்றால் உயிராம். செக்ஸ் வேண்டுமா, சாக்லேட் வேண்டுமா பாப்பா என்று கேட்டால் சாக்லேட்தான் என்று சப்புக் கொட்டி வாங்கிச் சாப்பிடுவார்களாம்.

தான் அணியும் டிரஸ்ஸைப் போல வேறு யாரும் டிரஸ் அணிவதை பெண்கள் விரும்ப மாட்டார்களாம். அதுவும் ஒரே மாதிரியான டிரஸ்ஸில் யாராவது பெண் வந்து விட்டால் அவ்வளவுதான் டென்ஷனாகி விடுவார்களாம்.

ஆண்களை விட வேகமாக பருவத்திற்கு வந்து விடுகிறார்களாம் பெண்கள். மேலும் ஆண்களை விட மன முதிர்ச்சியிலும் பெண்கள்தான் பாஸ்ட்டாம்.

செக்ஸைப் பொறுத்தவரை ஆண்களைப் போல எப்போது பார்த்தாலும் செக்ஸ் தேவை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பதில்லையாம். அதை உணர்வுப்பூர்வமான விஷயமாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகிறார்களாம்.

இப்படி பெண்கள் குறித்த வித்தியாசமான விஷயங்கள் நிறையவே இருக்கு…!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது வேற லெவலாள இருக்கு..! (வீடியோ)
Next post இதுவரை நீங்கள் பார்த்திராத உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்!! (வீடியோ)