என்ன விலை அழகே…!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 7 Second

“கேரளா போனேன். மசாஜ் எடுத்துட்டு வந்தேன். குற்றாலம் போனேன். செமையா ஒரு ஆயில் மசாஜ் எடுத்தேன்” என நண்பர்கள் பேசுவதை கேட்டிருப்போம். உண்மையில் மசாஜ் என்றால் என்ன? அதை எதற்கு எடுக்க வேண்டும்? குற்றாலம், ஒகேனக்கல் போன்ற அருவிகள் இருக்கும் இடத்தில் எடுக்கும் மசாஜுக்கும், பார்லர்களில் நாம் எடுக்கும் பாடி மசாஜுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விகளோடு அழகுக்கலை நிபுணர் யாஸ்மினை அணுகியபோது நம்மை உற்சாகமாய் வரவேற்றார். மசாஜின் பிறப்பிடம் தாய்லாந்து. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான மசாஜ் இருக்கு. பியூட்டீசியன் கோர்சில் மசாஜ்கென தெரப்பிஸ்ட், மசாஜிங் தெரப்பிஸ்ட் படிப்புகளும் உள்ளன. தமிழகத்தின் மலையடிவாரங்களில் வழங்கப்படும் மசாஜ் ஒரு சின்ன ரிலீஃப் அவ்வளவுதான்.

அதில் சுற்றுலாவாசிகளுக்கு ஒரு என்டர்டெய்ன்மென்ட் கூட இருக்கு. மசாஜ் எங்கேயும் பண்ணலாம். ஆனால் அது முறைப்படி இருக்கணும். நமது உடலில் இருக்கும் வலி குறையணும். அதுதான் சரியான பாடி மசாஜ். ஒருவர் சரியான முறையில் மசாஜ் பண்றாங்கன்னா அவங்க தர்ற பிரஷர் பாயின்ட்லே நமக்கு தெரியும். உடல் முழுவதும் மசாஜ் செய்யும் இடங்களும் உள்ளது. பகுதி பகுதியாக மசாஜ் செய்யும் இடங்களும் உண்டு. அதாவது தலைப் பகுதி, உடல் பகுதி, பின்புறமாக முதுகு மற்றும் முதுகில் இருந்து இடுப்பு வரை, மார்பகம் பகுதி இப்படி தனித்தனியாக மசாஜ் எடுக்கலாம். உங்களுக்கு என்ன மசாஜ் தேவையென நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து மசாஜ் செய்வதால் உங்க உடலுக்கு ஒரு வடிவம் கிடைப்பதுடன், உடல் தளர்வின்றி உறுதியாகும். தோலில் மினுமினுப்பும் ஏறும். அதனால்தான் குழந்தைகள் பிறந்ததும் உடல் உறுப்புகளை வலுப்படுத்த எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறோம். ஆயில் பாத்தும் கொடுக்கிறோம். உடலுறுப்பு தளர்ந்து இருக்கும் குழந்தையின் உடல் வலுவடையும்.
இப்போது உள்ள சூழலில் இருபாலருக்கும் மன அழுத்தம் நிறைய உண்டு. மறுநாள் வரப்போகும் வேலையின் பளு கூட அழுத்தத்தை தரலாம். தொடர்ந்து கணினியில் வேலை செய்பவர்களுக்கு அதன் தாக்கம் அழுத்தத்தை தரும். இதை எல்லாம் மனதில் வைத்து அவரவர் உடலுக்குத் தேவையான ரிலாக்சேஷனை மசாஜ் மூலமாகக் கொடுக்கலாம். மாதத்திற்கு ஒரு முறை அல்லது உங்கள் உடல் தேவையினைப் பொருத்து இரண்டு முறைகூட எடுக்கலாம்.

பிரஷர் பாயின்ட், ப்ளம்பிங் பாயின்ட், ப்ளட் சர்குலேஷன் எல்லாவற்றுக்கும், தலைமுதல் கால்வரை எங்கெல்லாம் பிரஷர் பாயின்ட் இருக்கோ அங்கெல்லாம் சரியான பாயின்டில் தரப்படும். உடல் உறுப்புகள் யாவும் நார்மல் நிலைக்கு வரும். நன்றாகத் தூக்கம் வரும். மசாஜை நீங்க எந்த அளவு உள்வாங்குகிறீர்களோ அந்த அளவிற்கு ரிலாக்சேஷன் கிடைக்கும். மனம் அமைதி பெறும். வேலையின் அழுத்தத்தில் இருந்து விடுபட 15 நாளைக்கு ஒரு முறை பிரஷர் மற்றும் டிஷ்யூ மசாஜ் எடுக்கலாம். பாடி மசாஜில் எண்ணெய் தேய்த்து ரிலாக்ஸ் மூவ்மென்ட் கொடுத்து, பின் நார்மலுக்கு கொண்டு வருவோம். கிங் ஃபிங்கர் எனப்படும் கட்டை விரலை பயன்படுத்தியே மேலும் கீழும் அழுத்தம் தரப்படும்.

பட்டர் ஃப்ளை மூவ்மென்ட், ஸிக்ஸாக் மூவ்மென்ட். டாப்பிங், புஷ்ஷிங் மூவ்மென்ட் இவை அனைத்தும் தரும்போது உள்ளிருக்கும் திசுக்கள் சமநிலைக்கு வருவதுடன், இறந்த செல்கள் நார்மலுக்குத் திரும்பும். நரம்பு, ரத்த ஓட்டம், மாதவிடாய் எல்லாமே சரியான செயல்பாட்டிற்கு வரும். ஒருவர் உடலில் தொடர்ந்து எண்ணெய் தேய்த்தாலே தோல் மினுமினுப்பாக மாறும். அதனால்தான் சினிமா நடிகர், நடிகைகள் தூரத்திலிருந்து பார்க்கும்போதே மினுமினுப்பாகத் தெரிகிறார்கள். உடலின் ரிலாக்சேஷனுக்கு தேங்காய் எண்ணெய்தான் சிறந்தது. இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், உடலுக்கு உறுதியும், தோலிற்கு பளபளப்புத் தன்மையும் தரும். அதனால்தான் கேரள மக்கள் சமையல் மற்றும் ஸ்கின் மாய்ஸ் சரைசிங், ஸ்கின் கேர் எல்லாவற்றுக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களின் தோல் மென்மை, நிறம் எல்லாம் ஒரே சீராக உள்ளது. கேரளாவில் தேங்காய் எண்ணெய் தவிர சித்த மருத்துவ மூலிகை எண்ணெய் பயன்படுத்தியும் மசாஜ் செய்வார்கள்.

பாதாம் எண்ணெய் பயன்படுத்தி எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் நல்லது. வால்நட்டை பாதாம் எண்ணெயில் ஊற வைத்து பயன்படுத்தலாம். செரிமானம், முடி வளர்ச்சி, தோலின் மினுமினுப்புக்கு பாதாம் எண்ணெய் மிகவும் சிறந்தது. நல்லெண்ணெய் மசாஜ் செய்தால் மாதவிடாய் வலி, தலையில் இருக்கும் சூடு தணியும். உடல் உறுதியாகும். ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், நவரத்தினா எண்ணெய், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி எண்ணெய் இதெல்லாம் கூட பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். எல்லாம் கலந்த மிக்ஸ்ட் எண்ணெய் கூட விற்பனையில் இருக்கிறது. பெண்களுக்கு அடி வயிற்றில் இருக்கும் தழும்புகளை நீக்க, தளர்ந்துவிட்ட தொப்புள் பகுதி, அடி வயிற்றுப் பகுதிகளுக்கு அடி விழுது வேர் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

இரவு தூங்கும்போது முகம், கண், கழுத்துப் பகுதிகளில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி பயன்படுத்தி வந்தால் தோலின் நிறம் மாறும். தேங்காய் எண்ணெயை சூடு செய்து, அதில் கற்பூரத்தை சேர்த்து கரைந்ததும், வடிகட்டி வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் கால் மற்றும் உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் தடவி சுடுநீர் பேக் அல்லது சுடுதண்ணீரில் டவல் நனைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். முக்கியமாக பெண்கள் பயன்படுத்தினால் வலியிலிருந்து உடனடி விடுதலை கிடைக்கும்.

ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் பெண்களின் மாதவிடாய் சைக்கிள் மாறும்போது மார்பகத்தின் அளவும், அமைப்பும் மாறும். அதை சரிப்படுத்த பிரஸ்ட் மசாஜ் எடுக்கலாம். தாய்ப்பால் சரியாக தரமுடியாத பெண்கள் மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் இது நல்லது.இளம் வயதில் உடலமைப்பு எட்டு வடிவிலும், முப்பது வயதிற்கு மேல் எஸ் வடிவிலும் மாறும். இதற்கு பெல்லி மசாஜ் சிறந்தது. சிலரின் கன்னப் பகுதி ஒட்டி இருக்கும்.

சிலருக்கு உப்பி இருக்கும். ஃபேஸ் மசாஜ் மூலமாக லிஃப்ட் பண்ணும்போது உள்ளே இருக்கும் ஆன்டிக் ரொட்டேட் செய்யப்பட்டு, மேல் நோக்கி செல்லும்போது முக அமைப்பு நன்றாக இருக்கும். இறந்த செல்கள்கூட சரியாகும். முகத் தழும்பு, முகப் பரு எல்லாம் சரியாகும். பாடி மசாஜை பொறுத்தவரை தெரிந்த நபர்களை வீட்டிற்கு வரவழைத்து தொடர்ந்து அவர் மூலமாக எடுப்பதே சிறந்தது. பாதுகாப்பானது. மசாஜ் பார்லர்களுக்கு செல்வதாக இருந்தால் முறையான அப்பாயின்ட்மென்ட் பெற்று கவனமாக சென்று வரவேண்டும். பாடி மசாஜ் எடுக்க தேவைப்படும் நேரம் மற்றும் அவர்கள் வழங்கும் சேவையினைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்!!! (மகளிர் பக்கம்)
Next post குடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி!! (மருத்துவம்)